தமிழக வெற்றிக்கழக வெற்றியாளர்கள் கவனத்திற்கு
தமிழக வெற்றிக்கழக வெற்றியாளர்கள் கவனத்திற்கு
தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தத் தேர்தலின் மூலம் பொதுமக்கள் அனைவரும் உணர்த்துவது என்னவென்றால் ஊழல் இல்லாத, போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத, சிறப்பான சட்டம் ஒழுங்குடன் கூடிய ஒரு நல்ல ஆட்சியை எதிர்பார்த்தே மக்கள் மாற்றத்தை விரும்பி திராவிட சித்தாந்தம் கொண்ட இரு பெரும் அரசியல் இயக்கங்கள் மீது இல்லாத ஒரு நம்பிக்கையை தமிழக வெற்றி கழகத்தின் மீது வைத்து தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
மேலும் இலவசங்கள், வாக்கு செலுத்த பணம் போன்ற பல மக்களை வாக்களிக்க தூண்டும் தூண்டில்களில் எதுவும் சிக்காமல் நல்லாட்சி ஒன்றே நமக்குத் தேவை என்பதை உணர்ந்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது இந்த தேர்தலில் தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றி கழக முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதனை உணர்ந்து மக்களுக்கு ஒரு நல்ல ஆட்சி வழங்கினால் வரும் காலங்களில் தமிழக வெற்றி கழகம் நிரந்தரமாக ஆட்சியில் இருக்க அது வழிவகை செய்யும்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள பல வேட்பாளர்களும் பிரச்சாரத்திற்கோ அல்லது மற்ற சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமான செலவுகளோ பெரிய அளவில் செய்யவில்லை. இதனால் மக்கள் உங்கள் மீதுள்ள நம்பிக்கையை காப்பாற்ற ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அவர்களது தொகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் சிறந்த முறையில் செய்து தங்களுக்கும் தங்களைச் சார்ந்த தமிழக வெற்றி கழகத்திற்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
.jpeg)

Comments
Post a Comment