இரட்டை வேடம் போடுகிறாரா கனிமொழி?
திமுகவில் உள்ள தலைமை குடும்பத்தில் நிர்வாக திறனும் ஆளுமையும் அரசியல் தந்திரங்களும் அதிகம் தெரிந்த ஒரே தலைவர் என்றால் திருமதி கனிமொழி அவர்கள் மட்டுமே.
கனிமொழி அவர்கள் அரசியலில் ஓரளவுக்கு குறைந்தபட்ச நாகரிகத்தை கடைபிடிக்கும் திமுக அரசியல்வாதியாக அறியப்பட்டவர்.
ஆனால் அவரும் பல தேர்தல்களில் பல பொய்யான வாக்குறுதிகளை அழிக்க காரணமாக இருந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டின் திமுக அரசின் தேர்தல் அறிக்கை தயாரித்த முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.
திருமதி கனிமொழி அவர்கள் 2016 தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது கட்சி உறுப்பினர்களோ தலைவர்களோ யார் மதுபான ஆலை நடத்தினாலும் அது மூடப்படும் என்றும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த ஆவண செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் அதிக மக்கள் மதுவால் இருந்ததாகவும் இதனால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதேபோல் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது சுங்க கட்டணம் ரத்து கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் பெட்ரோல் டீசல் விலை ரூ.5 குறைப்பு மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நீட் விலக்கு போன்ற பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
ஆனால் தற்போது அவற்றில் ஒன்று கூட நிறைவேற்றப்படுவது பற்றி பேசுவதோ அல்லது அதற்கான முயற்சிகள் எடுப்பதோ எதுவும் செய்வதில்லை அவர்.
மேலும் தீண்டாமை சமூகநீதி என வாய் கிழிய பேசும் கனிமொழி அவர்கள் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அவமானப்படுத்தப்பட்ட போதும் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து மக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாகவும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏன் இப்படி ரெட்டை நாக்கு கொண்டு இரட்டை நிலைப்பாடுடன் இருக்கிறார் என்று ஊடகத்தினர் யாரும் கேட்பதும் இல்லை. அப்படியே ஏதாவது ஒரு ஊடகத்தினர் கேள்வி கேட்டாலும் அதைக் கடந்து ஓடி ஒளிந்து கொள்கிறார். இதுதான் திராவிட மாடலின் வீரம் சமூக நீதியா?
அதேபோல் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பொங்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற கனிமொழி அவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக வாயே திறக்கவில்லை. திமுக பிரமுகர் ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட போதும் இது பற்றி வாயை திறக்காத கனிமொழி அவர்கள் இனி வரும் காலத்தில் பேச முடியுமா? அவருக்கு பேச அருகதை இருக்கிறதா என்பதை மக்களை தெரிந்து கொள்ளட்டும்.
தங்களது திமுக ஆட்சியின் நிர்வாக தவறு காரணமாக கள்ளச்சாராயத்தினால் 60க்கும் மேற்பட்ட உயிர்கள் போனபோது அனிதா நீட் மரணத்தை வைத்து அரசியல் செய்த கனிமொழி வாய திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment