விடுதலைச் சிறுத்தைகள் கடந்து வந்த பாதை
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள். இது அந்த மக்களின் முன்னேற்றத்திற்கும் வாழ்வாதாரத்தில் மாற்றங்களை கொண்டு வரவும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு அரசியல் களத்தில் செயல்பட்டு வந்தது.
ஆரம்ப காலத்தில் அவர்களின் நோக்கத்தில் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள். நாளடைவில் அரசியல் சூழ்நிலைகள் காரணமாகவும் தங்கள் சுயலாபத்திற்காகவும் சில தவறான முடிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
அது மெல்ல மெல்ல விரிவடைந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் பற்றிய பொது மக்களின் கருத்து எப்படி இருக்கிறது என்றால் சமூக விரோத செயல்களிலும் கட்டப்பஞ்சாயத்துகளிலும் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் மற்ற சமூகப் பெண்களிடம் காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்து அவர்கள் வாழ்க்கையை சீரழிப்பது அல்லது பெற்றோர்களிடம் கட்ட பஞ்சாயத்து பேசுவது பணம் பறிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ரவுடிகளாகவும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அரசியல் அல்லகைகளாகவுமே இருக்கின்றனர் என்றும் அரசியல் நோக்கங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனால் தமிழக மக்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றாலே ஒருவித வெறுப்புணர்வு உண்டாகியுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த நிலை மாற வேண்டுமெனில் அவர்கள் ஆக்கபூர்வமான தங்கள் சமூக மக்களை வாழ்வியல் ரீதியாக உயர்த்துவதற்கான திட்டங்களில் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். குறிப்பாக விளிம்பு நிலை மக்களை அடியாட்களாகவும் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளாகவும் உருவாக விடாமல் தடுத்து கல்வி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் அவர்களை சீர்திருத்தி சமூகத்தில் நல்ல வேலை மற்றும் தொழில் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தி வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொழுது தான் விடுதலை சிறுத்தைகள் மீதான மதிப்பு உயரும்.
இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவர்களின் தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் என்று கல்வி ரீதியாகவோ வேலை வாய்ப்பு ரீதியாகவோ பொருளாதாரம் முன்னேற்றம் சார்ந்தோ எந்த ஒரு முன்னெடுப்பும் செய்யப்படவில்லை. மாறாக அவர்கள் கட்சியில் உள்ள பெரிய தலைவர்களே அவர்களை குற்றவாளியாக்கும் நோக்கிலேயே அடங்க மறு அத்துமீறு போன்ற வசனங்களை பேசி நமது கட்சி தொண்டர்களுக்கு குறைந்தது 10 வழக்குகள் ஆவது இருக்க வேண்டும் என்றும் மற்ற சமூகப் பெண்களை கட்டு எதிர்ப்பவனை வெட்டு என்பது போன்ற சமூக விரோத வாழ்க்கை வழிமுறைகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்போதுள்ள சமூக வலைத்தள உலகில் நல்ல கருத்துக்களை கூறி ஆக்கபூர்வமான அரசியலை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதை விடுத்து பழைய அரசியல் முறையை பின்பற்றினால் சில காலங்களில் அரசியலை விட்டு மக்கள் புறக்கணிக்கும் அளவிற்கு நிலைமை மாற வாய்ப்புள்ளது.


Comments
Post a Comment