திமுகவின் பெயர் அரசியல் எடுபடுமா?

 



தமிழகத்தில் தற்போது மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி அதைப் பெயர் மாற்றியது சம்பந்தமாக திமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

 திமுக செய்யும் இந்த பெயர் அரசியலில் அவர்களே சிக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. காரணம் தமிழகத்தில் பல விடுதலைப் போராட்ட வீரர்கள் முக்கிய அரசியல் தலைவர்கள் இருந்தும் இவர்கள் வைக்கும் அனைத்து திட்டத்திற்கும் பெயர் முதலமைச்சர் ஸ்டாலின் பெயராகவே உள்ளது. மேலும் பல அரசு பேருந்து நிலையங்களுக்கும் கட்டிடங்களுக்கும் பாலங்களுக்கும் கருணாநிதி பெயர் அல்லது தெலுங்கர்களின் பெயர்களையே வைத்துள்ளனர். இவர்கள் இதுவரை ஏதாவது ஒரு திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை வைத்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது. 



 பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம் பி அவர்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி வடமாநிலங்களில் உள்ளவர்களுக்கும் மத்திய அரசுக்கும் தெரியவில்லை என்றும் உரிய அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


 ஆனால் இங்கு தமிழ்நாட்டில் ஒரு திட்டத்திற்கு கூட ஒரு இடத்திற்கு கூட வ உ சி பூலித்தேவன் போன்ற பல விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களில் ஒன்றைக் கூட திமுக அரசு வைக்கவில்லை.

 மாறாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந்துகளில் இருந்த தமிழ்நாடு என்ற பெயரை கூட எடுத்துவிட்டு தங்கள் 7 தெலுங்கு இன புத்தியை காமித்து தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தெலுங்கர்களின் தேசமாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது இந்த போராட்டம் நடத்த என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?