கைப்பிடி இல்லாத கத்தி போன்று ஆபத்தானதா? (AI) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
உலகில் அனைத்து பகுதிகளிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பம் எதுவென்றால் அது என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும்.
கடந்த சில ஆண்டுகளாக எப்படி கம்ப்யூட்டர் மற்றும் IT என அழைக்கப்படும் தொழில்நுட்பத்துறை உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோ அதுபோல வருகின்ற சில ஆண்டுகளை AI தொழில்நுட்பம் என்பது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
AI தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வேலைகளும் எளிதாக செய்ய முடியும் என்பதும் சில வேலைகளை தானே எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றதாகவும் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்பது பலன் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை இதில் அறியலாம்.
AI தொழில்நுட்பத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு வேலைகளை எளிதாகவும் குறைந்த கால அளவிலும் குறைந்த செலவிலும் முடிக்க முடியும். இதனால் பல பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் உள்ள சிறு குறு தொழில்கள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக ஒரே மாதிரி செய்யக்கூடிய வேலைகளை மனித ஆற்றல் இல்லாமல் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக செய்து முடிக்க முடியும்.
இதனால் பல நிறுவனங்களின் செலவுகள் வெகுவாக குறைந்து லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் இந்த தொழில்நுட்பத்தின் காரணமாக பலருக்கும் வேலைய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உண்மை.
தானியங்கி தொழில்நுட்பக் கார்கள் மற்றும் ரோபாட்கள் போன்றவை மனித ஆற்றல் கொண்டு செய்யக்கூடிய பல வேலைகளுக்கு மாற்றாக அமையும். அதுமட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வேலைகள் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செய்யக்கூடிய வேலையில் அமையும். வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகளிலும் இதன் ஆதிக்கம் அதிகம் இருக்கும். குறிப்பாக பாதுகாப்பு துறையிலும் AI தொழில்நுட்பத்தின் தேவை மிக அதிகம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போதுள்ள புதிய தலைமுறை பிள்ளைகள் பள்ளிகள் தங்களுக்கு வீட்டுப் பாடங்களை செய்வதற்கே தற்போது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இது வரும் காலங்களில் மனித குலத்தின் சிந்திக்கும் ஆற்றலையே தடுக்கும் வகையில் இருக்கும் என்பது ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. புதிய தலைமுறை பிள்ளைகள் தங்கள் எல்லா வேலைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கலந்தாலோசித்து அவற்றின் துணையுடனே செயல்களை செய்ய பழகி வருகின்றனர். இது மிகுந்த ஆபத்து அளிக்கக் கூடியதாக உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு சிறுவன் தனது வீட்டுப் பாடங்களில் தொடங்கி எல்லா வேலைகளையும் எழுதி தொழில்நுட்பத்தின் துணையுடன் செய்து பழகி தனது வீட்டில் உள்ள குடும்பத்தினரிடம் பேசுவதை குறைத்து எல்லா செயல்களும் செய்து வந்ததால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை எண்ணத்திற்கு வந்துள்ளான். இதுகுறித்து இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் விவாதித்த பொழுது அது அவனை தற்கொலை செய்வதற்கு தூண்டி உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இது ஏழை தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்ற முதல் கொலையாக கருதப்படுகிறது. இதுபோன்ற பல ஆபத்தான செயல்களும் வரும் காலங்களில் நடக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாது சிலரது சிந்திக்கும் திறனும் முழுமையாக பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எப்படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மக்களின் வளர்ச்சிக்கு உதவுமோ அதே அளவிற்கு மக்களுக்கு எதிராக செயல்படவும் வாய்ப்பு உள்ளது என்பதை நாம் அறிந்து அதனை சரியான வயதில் வழியில் பயன்படுத்தினால் மட்டுமே நம்மால் அடுத்த கட்டத்திற்கு தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்துச் செல்ல முடியும் என்பதை உண்மை.


Comments
Post a Comment