அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலைக்கு ஆபத்தா?
உலகெங்கும் மக்கள் தற்போது பெரும்பாலான பொருட்களை வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைன் மூலம் வாங்குவது விரும்புகின்றனர்.
இது போன்ற ஆன்லைன் விற்பனைத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது அமேசான். உலகம் முழுவதிலும் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. தற்போது ஆர்டர் செய்யும் பொருட்களை அந்தந்த பகுதிகளில் டெலிவரி அமேசான் நிறுவனம் டெலிவரி பார்ட்னர்களாக பலரையும் வேலைக்கான அமர்த்தி உள்ளது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆனால் தற்போது அமேசான் நிறுவனம் தனது டெலிவரி வேலைகளை செய்ய செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருட்களின் மூலம் ட்ரோன்கள் வழியாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்து வருகிறது.
இதன் மூலம் நிறுவனத்திற்கு டெலிவரி பார்ட்னர்களுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகைகள் மிச்சம் ஆவதோடு டெலிவரி பார்ட்னர்கள் வழியாக வரும் பல பிரச்சனைகளும் தவிர்க்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் பொருட்களை வழங்க முடியும் என்று நிறுவனம் கருதுகிறது.
இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு பரிபோகக் கூடிய அபாயம் உள்ளது.
இது அமேசான் நிறுவனத்துடன் நிற்க வாய்ப்பு இல்லை. இது அனைத்து ஆன்லைன் டெலிவரி சேவை நிறுவனங்களும் படிப்படியாக இதுபோன்று தங்கள் டெலிவரி சேவைகளை வழங்க முயற்சிக்கலாம்.
இதனால் வரும் காலங்களில் தொடர்ந்து இது போன்ற வேலைவாய்ப்புகள் குறைய கூடிய அபாயம் உள்ளது.

Comments
Post a Comment