தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?
தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?
இன்றைய கால சூழ்நிலையில் எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது கணினி தொழில்நுட்பத்தில் ஏ ஐ (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் ஒரு புதிய தொழில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் கணினி துறையில் பல வேலைகள் நுட்பத்தின் மூலம் எளிதாக செய்ய முடிகிறது. பல வேலை ஆட்கள் மூலம் பல மணி நேரம் செய்ய வேண்டிய வேலைகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் எளிதாக செய்து விடுகிறது.
இதுபோல் மற்ற துறைகளிலும் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. எடுத்துக்காட்டாக தானியங்கி மோட்டார் வாகனங்கள் டிரைவர்(ஓட்டுநர்) இல்லாமலே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுமான துறைகளிலும் பூச்சு வேலை, டைல்ஸ் பதிக்கும் வேலை மற்றும் பொருட்களை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் வேலை போன்ற பல வேலைகளுக்கு புதிதாக பல மிஷின்கள் வந்துவிட்டன.
இதனால் கணினி துறையில் வேலை பார்க்கும் பலருக்கும் வேலை இழக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் இனிவரும் காலங்களில் ஓட்டுநர் மற்றும் கட்டிட வேலை செய்பவர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
ஆனாலும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே நாம் நம் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும் மேலும் முன்னேறவும் அன்றாடம் நடைபெறும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பற்றிய விபரங்களை அறிந்து அதற்கேற்றார் போல் நமது திறமைகளையும் மேலும் தற்போதைய கால சூழ்நிலைகளுக்கு ஏற்றது போன்ற தொழில்நுட்பங்களை பயின்று அதன் மூலம் வரும் புதிய வேலை வாய்ப்புகளை கைப்பற்றும் திறனோடு இருப்பது அவசியம்.
இன்றைய சூழ்நிலையில் பெரிய நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த பல நிறுவனங்கள் இதுபோன்ற புதிய மாற்றுத் தொழில்நுட்பங்களை வரவேற்க தயாராக உள்ளது.
ஏனெனில் இந்தத் துறைகளில் வேலை செய்யும் பல வேலை ஆட்கள் அதிகபட்ச ஊதியத்தை வாங்கிக் கொண்டு சரியான முறையில் வேலைகள் செய்வதில்லை அதுமட்டுமல்லாமல் குறித்த நேரத்தில் வருவதில்லை நினைத்த நேரத்தில் விடுப்பு எடுப்பது மேலும் உயர் அதிகாரிகள் அல்லது முதலீட்டாளர்களின் பேச்சுக்களை கட்டளைகளை மதிப்பதில்லை இதுபோன்ற காரணங்களால் அவர்கள் மாற்று தொழில் நுட்பங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
நமது வேலைகளை பாதுகாத்துக் கொள்ள நாம் சரியான முறையில் முதலீட்டாளர்களுக்கு லாபம் பெற்றுத்தரும் முறையில் வேலை செய்தால் மட்டுமே நமது வேலை நிரந்தரமாக இருக்கும் என்பதை தொழிலாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment