தமிழகம் மெல்ல மெல்ல தெலுங்கர்கள் பிடியில் செல்கிறதா?
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சி எப்போதும் செய்வது மொழி அரசியல்.
அவர்கள் எப்போதும் இந்தி மொழியை எதிர்த்து போராட்டம் நடத்துவதும் ஏதோ தமிழ் மொழிக்கு அவர்கள் தான் பாதுகாப்பு அதிகாரம் பெற்றவர்கள் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் உண்மையில் தமிழ் மொழியை திட்டமிட்டு அழிப்பதும் தமிழர்களை பின்னுக்கு தள்ளி தெலுங்கர்களை வாழ வைப்பதும் திமுக தான் என்பதை தமிழ் மக்கள் எப்போது அறிந்து கொள்வார்கள் என்பதே தெரியவில்லை.
மூன்றாவது மொழியாக இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுபவர்கள் தங்கள் அமைச்சரவையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்பதை மறைத்துக் கொண்டே வருவார்கள்.
இந்தி மொழி எதிர்ப்பது போலவே தெலுங்கர்களின் தெலுங்கு மொழியையும் எதிர்க்க வேண்டும் என்பது தானே நியாயம். இந்தி மொழி வந்தால் தமிழ் அழியும் என்றால் தெலுங்கு மொழி வந்தாலும் தமிழ் அழிய தானே செய்யும்.
இங்கிருக்கும் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுக்கும் கடவுள் கூட தெலுங்கு தேசத்தில் தான் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாது மறைமுகமாக அரசுத்துறைகள் மற்றும் அமைச்சர்களின் அரசியல்வாதிகளின் சகாக்கள் மற்றும் வேலை ஆட்கள் தொழில் பங்குதாரர்கள் என பல இடங்களிலும் தெலுங்கர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
இப்படியே இந்த நிலை நீடித்தால் கூடிய விரைவில் தமிழகத்தில் தமிழன் தெலுங்கனுக்கு அடிமையாக வேண்டிய சூழ்நிலைக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
எந்த மாநிலத்திலும் எந்த மொழி சார்ந்தவர்களும் அரசியல் செய்யலாம் என்றாலும் அந்த மாநில மண்ணின் மைந்தர்களுக்கும் அந்த மாநில மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்குமே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும்.
விழித்துக் கொள் தமிழா நீ தேர்ந்தெடுக்கப் போகும் தலைவன் தான் தமிழகத்தை காப்பாற்றும் பிரதிநிதியாக செயல்பட வேண்டும். எனவே வாக்களிக்கும் போது ஒரு முறை இரு முறை யோசித்து நம் தமிழ் மண்ணின் மைந்தனை தேர்ந்தெடுத்தால் மட்டுமே தமிழகம் காப்பாற்றப்படும்.



Comments
Post a Comment