வங்கதேசத்தினர் ஊடுருவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
நமது இந்திய நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் திருநாமல் காங்கிரஸ் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் பலவும் வாக்காளர் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன.
இந்த தீவிர வாக்காளர் திருத்தச் சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நபர்கள் இறந்து போயிருந்தாலும் அல்லது மாற்றலாகி வேறு இடங்களுக்குச் சென்று இருந்தாலோ அவர்களது வாக்குரிமை பட்டியலில் இருக்கும். அவற்றை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் 18 வயதிற்கு மேல் உள்ள புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பலர் சட்ட விரோதமாக அந்நிய நாட்டவர்கள் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர் அவற்றின் கண்டறிந்து நீக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும்பான்மை பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறும் நிலை உருவாகும். கள்ள ஓட்டுக்கள் தடுக்கப்படும் சட்டவிரோத ஜனநாயக நடைமுறைகள் தடுக்கப்படும். பொதுமக்கள் விரும்பும் அரசியல் கட்சியை வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்ல அது சரியான வாக்காளர்களின் எண்ணிக்கை தெரியும். இதனால் பல வாக்குச்சாவடிகளில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை குறையும். அதற்கேற்றார் போல் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அரசுக்கு தேர்தல் நடைமுறையில் ஏற்படும் செலவுகள் பெருமளவு குறையும்.
சட்டவிரோதமாக ஆட்சியைப் பிடிக்க முயலும் சமூக விரோத சக்திகள் தடுக்கப்படும். இதனால் மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் எளிதாக மக்களை வந்து அடையும்.
குறிப்பாக வங்கதேசத்தில் இருந்து நமது நாட்டிற்குள் பலரும் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைக் கண்டறிந்து அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு இந்த தீவிரவாக்காளர் சரி பார்க்கும் முகாம் பெரிதும் உதவி செய்யும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
நமது நாட்டிற்குள் வங்கதேசத்தினர் வந்து சட்டவிரோதமாக குடியேறுவதால் நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அரசின் சலுகைகள் மற்றும் மானியங்கள் இலவசங்கள் போன்றவை சமூக விரோதிகளால் சட்டவிரோதமாகசட்டவிரோதமாக இவர்களைப் போன்று வங்கதேசத்தினருக்கு வழங்கப்பட்டு வருகிறது தடுக்கப்படும். இதனால் அரசிற்கு பல கோடி ரூபாய்கள் மிச்சமாவதோடு அவற்றை நல்ல பல திட்டங்களுக்கும் மேலும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் திட்டங்களுக்கும் செலவிட ஏதுவாக இருக்கும்.
மேலும் இந்த சட்ட விரோத குடியேறிகள் நமது நாட்டின் குடிமக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பினை தட்டிப்பறித்து அவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனால் நமது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற வங்கதேசத்தினரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு முயற்சி செய்யும்பொழுது திருநாணாமல் காங்கிரஸ் தலைவர் திரு மம்தா மானர்ஜி போன்றவர்கள் அதனை எதிர்த்து சட்டவிரோத குடியேறிகளுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இது சொந்த நாட்டுக்கு துரோகம் செய்யும் செயலாகவே பார்க்கப்படும். இவர்கள் தங்கள் சொந்த ஆதாயத்திற்காகவும் இதுபோன்ற சட்டவிரோத குடியரிகளை வைத்து முறையற்ற முறையில் ஆட்சியைப் பிடிப்பதற்கு என்னையும் இவர்களை ஊக்குவித்து வருகின்றனர்.
மக்கள் இதுபோன்ற சமூக விரோதிகளை புரிந்து கொண்டு நாட்டிற்கும் நமது நாட்டு மக்களுக்கும் எது நன்மை பயக்குமோ அதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
தமிழகத்திலும் திருப்பூர் போன்ற பல இடங்களில் வங்கதேசத்தில் சட்ட விரோதமாக குடியேறி வேலை செய்து வருகின்றனர். இதனால் நமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிபோவதோடு நமக்கு நமது அரசு வழங்கும் நமக்கு பல சலுகைகளையும் நலத்திட்டங்களையும் சட்டவிரோத குடியேறிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனை கலையும் பட்சத்தில் நமது நாடு மேலும் மேலும் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த தீவிர வாக்காளர் திருத்த சட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் உள்நோக்கத்தையும் அவர்களது மக்கள் விரோத அரசியல் போக்கையும் புரிந்து பொதுமக்கள் நடந்து கொண்டால் மட்டுமே நாட்டில் மாற்றம் நிகழும்.


Comments
Post a Comment