மத வழிபாடு பற்றி அரசியல் அமைப்பு என்ன சொல்கிறது?
நமது இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுகிறது. இங்கே ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அவர் விருப்பப்படி அவரது மத வழிபாட்டு முறைகளை பின்பற்ற உரிமை உள்ளது.
ஆனால் நமது தமிழ்நாட்டில் இந்து மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களுக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால் இந்து மதத்தை நமது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கையில் வைத்துக்கொண்டு குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போன்று வைத்திருக்கிறது.
இந்திய அரசு சட்டப்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்ள அதிகாரம் கோயில் சொத்துக்களை நிர்வகித்து அதன் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்து கோயிலுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பது மட்டுமே ஆகும். மற்றபடி நமது இந்து சமயத்தின் ஆகம விதிகள், வழிபாட்டு சட்டதிட்டங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் தலையிட உரிமை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது இந்து சமய அறநிலைத்துறை என்பது முழு வீச்சில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நமது இந்து கோவில்களின் நிதி வருவாய் எடுத்து அரசு பல்வேறு மாற்று வழிகளில் செலவிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்து சமய அறநிலையத்துறையில் கிரிப்டோ கிருத்தவர்கள் ஆதிக்கமும் தெலுங்கர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இவர்களின் முழு நேர நோக்கம் தமிழக இந்து கோயில்களை சிதைத்து மதமாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுவது போல உள்ளது.
சிறுபான்மை மக்களின் காவலன் என்று இந்த அரசு தன்னை காண்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறநிலையத்துறை பயன்படுத்தியே இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
இன்னமும் இந்துக்கள் பலர் இது பற்றி அறியாமல் இந்து விரோத திமுக அரசை ஆதரித்துக் கொண்டுள்ளனர். இப்போதே விழித்துக் கொள்ளவில்லை என்றால் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழி படி இந்துக்கள் வாழ்வு மாறிவிடும்.


Comments
Post a Comment