நம்பிக்கை துரோகியான நாம் தமிழர்
தமிழ்நாட்டில் அரசியல் முக்கிய கட்சிகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழ் மற்றும் தமிழ் தேசியம் பற்றி எப்போதும் பேசக் கூடியவர். அப்படி அவர் தமிழ் பற்றி பேசும்போது தமிழ் கடவுள் ஆன முருகனை முப்பாட்டன் முருகன் என்று அழைப்பார்.
எப்போதும் முருகனைப் பற்றி பேசக்கூடிய திரு சீமான் அவர்கள் தமிழ் கடவுள் முருகன் திருத்தலமான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வின் போது நடந்த பிரச்சனையைப் பற்றி வாயே திறக்காமல் அமைதி காத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிஜேபி தவிர சிறுபான்மை வாக்குகளுக்காக அனைத்து கட்சிகளும் சிறுபான்மை வாக்குகளுக்காக தங்கள் சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் கூட அடக்க வைக்க தயங்க மாட்டார்கள் என்பதற்கு திரு சீமான் போன்றவர்களை சாட்சி. மற்ற விஷயங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு கருத்து சொல்லும் திரு சீமான் அவர்கள் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவின் பிரச்சனையில் ஓடி ஒளிந்து கொண்டு வாயில் வாழைப்பழத்தை வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இந்து மக்களுக்கு நம்பிக்கை துரோகியாக மாறிவிட்டது நாம் தமிழர் கட்சி.
அது மட்டுமில்லாமல் சமீபத்தில் அவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சென்று சந்தித்து வந்த பிறகு அவருடைய அரசியல் வேகமும் மட்டுப்பட்டுள்ளதோடு ஆளுங்கட்சிக்கு எதிராக வாய் திறக்காத மௌன நிலையில் உள்ளார். திமுகவுடன் ஏற்பட்ட இந்த சமரச நிலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
தமிழக அரசு நிர்வாகத்திலும் பெண்கள் பாதுகாப்பிலும் போதைப்பொருள் புழக்கத்திலும் தமிழகம் சிக்கி தள்ளாடி வரும் நிலையில் அதைப்பற்றி எந்த கருத்துக்களையும் கூறாமல் இப்படி இருப்பது அவரது அரசியல் வாழ்க்கைக்கு குழி பறிக்கும் என்பது அவருக்கு தெரியவில்லையா?
தற்போது நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திரு விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் சூழ்நிலையில் ஏற்கனவே சீமான் தனது வாக்கு வங்கியில் பெருமளவு இழப்பது நிச்சயம் என்று அரசியல் நோக்கங்கள் கூறிவரும் நிலையில் இது போன்ற மட்டமான அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக நாம் தமிழர் கட்சியை காணாமல் போகும் அபாயமும் உள்ளது.


Comments
Post a Comment