தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் அறநிலையத்துறை குளறுபடிகள்
தென்காசி மாவட்டத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக செய்யப்பட்டது.
இந்நிலையை தற்போது தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கோவிலின் பிரகாரத்தில் மழைநீர் வடிகால்கள் சரியாக அமைக்காததால் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் பலரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கும்பாபிஷேகத்தின் போது திருப்பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் அவை சரியாக முறையாக செலவிடப்படவில்லை என்று பக்தர்கள் சார்பில் அப்போதே பிரச்சனை எழுப்பப்பட்டது. அது தற்போது அவர்கள் செய்துள்ள வேலைகள் எதுவுமே தரமானதாகவும் நேர்த்தியானதாகவும் இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.
அதுமட்டுமல்லாது தற்போது மழை நீர் வடிவ வழியில்லாததால் பக்தர்கள் பிரகாரம் சுற்றிவர போடப்பட்ட சிமெண்ட் பாதையை உடைத்து தற்போது மீண்டும் வேலை செய்து வருகின்றனர். அறநிலையதுறை இவற்றையெல்லாம் முன்பே சரியாக கவனித்திருந்தால் இதுபோன்று பக்தர்களுக்கு தொந்தரவு இல்லாமலும் கோவிலின் நிதி சரியான முறையில் செலவு செய்யப்பட்டிருக்கும்.
தற்போது இருக்கும் திராவிட மாடல் அரசு கோவில் பணத்தை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக உள்ளது வேறு எந்த பணிகளும் சரியாக செய்யப்படுவதில்லை என்பது பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.



Comments
Post a Comment