பாவூர்சத்திரத்தில் பாலம் வேலை காரணமாக நெல்லை தென்காசி சாலையில் உள்ள ரயில்வே கேட் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும். பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 தற்போது நெல்லையிலிருந்து தென்காசிக்கு உள்ள தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது இதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தச் சாலையில் உள்ள பாலங்கள் அகலப்படுத்தும் பணிகளும் ரயில்வே புதிய பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்று 23 8 22 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாவூர்சத்திரத்தில் நெல்லை தென்காசி தேசிய நெடுஞ்சாலை உள்ள ரயில்வே கேட் பாலன் வேலை நடைபெறுவதின் காரணமாக அடைக்கப்பட்டிருக்கும். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடையம் சாலை வழியாக சென்று அத்தியூர் பகுதிக்கு சென்று சேரும் சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாளை முதல் வழக்கம்போல் சாலையை பயன்படுத்தலாம் என்று செய்தி குறிப்பிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


#Tenkasi #Tirunelveli #Pavoorchathram #Pothigaitimes #Pothigai #today #trending


Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?