நாம் தமிழர் கட்சியில் நடப்பது என்ன?
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே தமிழ் தேசியம், சுயசார்பு பொருளாதாரம் போன்றவற்றில் உறுதியாக நின்று போராடி வரும் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி முக்கியமான ஒன்றாகும்.
இதில் சீமான் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து முன்னின்று நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் தன்னார்வத்துடன் களப்பணி செய்து வருகின்றனர்.
இக்கட்சியின் மூலம் ஏராளமான புதிய இளைஞர்கள் அரசியல் தலைவராக உருவெடுத்து உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து களப்பணியாற்றி இரண்டாம் கட்ட தலைவர்களாக முன்னேறிய ராஜீவ் காந்தி கல்யாண சுந்தரம் காளியம்மாள் போன்ற பலரும் தமிழக மக்கள் பலராலும் அறியப்படுபவர்கள்.
ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் இக்கட்சியை விட்டு வெளியேறி வெவ்வேறு புதிய கட்சிகளின் இணைந்துள்ளனர் சிலர் இணைய தயாராக உள்ளனர். நாம் தமிழர் கட்சி நன்றாக வளர்ந்து வரும் நிலையிலும் இது போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களும் பலராலும் அறியப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் நிலையிலும் ஏன் இவர்கள் அக்கட்சியினை விட்டு வெளியேறினார்கள் என்பது அனைவரும் கேள்வியாக உள்ளது.
இதற்கு நாம் தமிழர் கட்சியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் அவர்களே வேறு சில கட்சியினர் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் கொடுத்து பிரித்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.
அது சில சமயம் உண்மையாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சிலரது கருத்து நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை சீமான் அவர்களின் கைகளில் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது. அதனால் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களை கொண்டவர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதையும் முழுமையாக புறம் தள்ள முடியாது. நாம் தமிழர் கட்சியில் சீமானைப் பொறுத்தவரை தனக்கு இணையாக யாரும் மக்கள் செல்வாக்கு பெற்று விடக்கூடாது என்றும் கட்சியில் அவருக்கு இணையாகவோ அல்லது செல்வாக்கு மிக்க நபராகவோ வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்று நாம் தமிழர் கட்சியில் உள்ள தொண்டர்கள் சிலரும் அக்கட்சியின் நிர்வாகிகளுமே தெரிவிக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் தெரிவிப்பது என்னவென்றால் இரண்டாம் கட்ட தலைவர்களோ அல்லது ஒரு செல்வாக்கு மிக்க நபரோ கட்சியில் உருவாகிவிட்டால் அது பின்னாளில் தனக்கு பெரிய உருவாக்கி விடக் கூடாது என்பதும் எப்போதும் கட்சித் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி செயல்படுகிறார் என்று நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Comments
Post a Comment