நெல்லை ராமையன்பட்டி பொதுப்பணித்துறை காவல்துறை வருவாய்த்துறை கூட்டு சேர்ந்து அகற்றிய விநாயகர் சிலை இந்துமுன்னணி போராட்டம் காரணமாக மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை
வெற்றி வெற்றி வெற்றி
*நெல்லை ராமையன்பட்டி பொதுப்பணித்துறை காவல்துறை வருவாய்த்துறை கூட்டு சேர்ந்து அகற்றிய விநாயகர் சிலை இந்துமுன்னணி போராட்டம் காரணமாக மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை*
நெல்லை மாநகரம் ராமையன்பட்டி இலந்தைகுளம் குளக்கரையில் இருந்த விநாயகர் கோவில் குளத்து ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் புகாரில் வருவாய்த்துறை காவல்துறையோடு இணைந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று காலை விநாயகர் கோவிலை இடிக்க துவங்கினர்
தகவல் அறிந்து *இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமையில்*
மாவட்ட தலைவர் *சிவா*
மாவட்ட பொதுச் செயலாளர் *பிரம்மநாயகம்*
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் *விமல் , சுரேஷ்* ஆகியோர் உடனடியாக பிரச்சனைக்குரிய இடத்திற்கு வரைந்தனர்
கோவிலை அகற்றியது இதே போல் கோவில் குளக்கரையில் உள்ள சர்ச் ஆக்கிரமிப்புகளையும் அளந்து அகற்ற உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என அதிகாரிகளிடம் இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் குற்றாலநாதன் சவால் விடுத்து பேசினார்
நாங்கள் நியாயமாக செயல்படுவோம் எந்த ஆக்கிரமிப்பு இருந்தாலும் அகற்றுவோம் என அதிகாரிகள் கூறினர்
*உங்களால் அங்குள்ள ஒரு செங்கலை கூட அகற்ற முடியாது என வாக்குவாதம் செய்தனர்*
நீங்கள் அளந்து பாருங்கள் நானும் காத்திருக்கிறேன் என இந்துமுன்னணியினர் காத்திருந்தனர்
உடனடியாக நிலஅளவையர் வரவழைக்கப்பட்டு குளத்தை அளந்த போது
*ஒன்னரை அடி இடம் சர்ச் ஆக்கிரமிப்புகளும் 5 அடி பாதை சர்ச் அருகில் உள்ள வீடுகளுக்கு ஆக்கிரமிப்பட்டு இருந்தது*
விநாயகர் சிலையை அகற்றியது போல் நியாயப்படி அவற்றை அகற்றுங்கள் இல்லாவிட்டால் நாங்கள் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என
காலை 12 மணி முதல் 3 மணி வரை அதே இடத்தில் இந்துமுன்னணி நிர்வாகிகளும் ராமையன்பட்டி ஊர் பொது மக்களும் காத்திருந்தனர்
ஒன்னரை அடி சர்ச் சுவர் மற்றும் 5 அடி பாதை அகற்றுவதற்கு தயங்கிய அரசு நிர்வாகம்
*கோவிலை அகற்றும் போது இந்துக்களிடம் உள்ளே தள்ளிருவேன் வீரவசனம் பேசிய பேட்டை காவல் ஆய்வாளர் ஹரிஹரன் பொதுப்பணிதுறை உதவிசெயற்பொறியாளர் திருநெல்வேலி தாசில்தார் இந்துமுன்னணி நிர்வாகிகளிடம் சமரசம் பேசினர்*
அகற்றப்பட்ட இடத்தில் நீங்கள் மீண்டும் விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளுங்கள் என அனுமதி அளித்தனர்
*அதனைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் வெற்றி கோஷம் முழங்க ஓம் கணேஷா ஜெய்கணேச என வெற்றி கோஷம் முழங்க வில்வ மரத்தடியில் விநாயகர் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டார்*
ஒரு பொது மக்கள் கண்ணீர் மல்க இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு நன்றி கூறினர் இந்து முன்னணி ஒவ்வொரு நிகழ்விற்கும் இனி நாங்கள் உடன் நிற்போம் என உறுதி அளித்தனர்
*ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும்*




Comments
Post a Comment