திருநெல்வேலி அரசு அதிகாரிகள் மற்றும்அரசியல்வாதிகளின் கனிவான கவனத்திற்கு
திருநெல்வேலி நகரில் வண்ணார்பேட்டை பகுதியில் மாலை நேரங்களில் சென்னை பெங்களூர் கோயம்புத்தூர் போன்ற பல பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் மற்றும் SETC பேருந்துகள் மற்றும் கோவில்பட்டி சங்கரன்கோவில் வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள ஆப்பிள் ட்ரீ ஹோட்டலின் அருகில் நின்று செல்கின்றன.
இந்தப் பேருந்துகளில் ஏறுவதற்காக திருநெல்வேலி மாநகரின் பல பகுதிகளில் இருந்து மக்கள் பலரும் வந்து காத்திருக்கின்றனர்.
ஆனால் அப்பகுதியின் சாலைகள் மிகவும் மோசமான தரத்தில் உள்ளது. பேருந்துகளை ஓரமாக ஒதுக்கி நிறுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் பலவும் தாறுமாறாக சாலைகளில் நிறுத்தி நிறுத்தப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் பேருந்துக்கு நிற்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாது பாலத்தின் மேலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் சாலை நடுவிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
அந்த வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் குறைந்த அளவு பயணியர் அமரும் அளவிற்கு நிழற்குடை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல நேரங்களில் பயணிகள் மழை வெயில் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் பயணிகள் சிரமப்படும் சூழ்நிலை உள்ளது.
வயதான முதியவர்கள் மற்றும் சிறிய குழந்தைகளை வைத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்தப் பகுதியில் அடிக்கடி சிறிய விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை இணைந்து இந்தப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இது போன்ற அடிப்படை பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசியலில் உள்ளவர்களுக்கு அதிகம் என்பதை உணர்ந்து அவர்கள் இதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Comments
Post a Comment