தமிழகத்தில் மாணவர்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது


தமிழ்நாடு எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது.

 தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம்,மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் இன்டர்நேஷனல் பள்ளிகளின் பாடத்திட்டம் என பல பிரிவுகளில் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

 இதில் மாநில பாடத்திட்ட மொழிகளில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சிபிஎஸ்சி மற்ற பாடத்திட்டங்கள் படிக்கும் பள்ளிகளில் தமிழ் ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுக்க படிக்கவும் முடியும்.

 தற்போது நம் பொதிகை டைம்ஸ் இதழ் சார்பாக சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்து உரையாடிய பொழுது அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது. 

 தமிழ்நாட்டில் படிக்கும் இன்றைய தலைமுறை மாணவர்கள் பலருக்கும் தமிழை சரியாக எழுத படிக்க கூட தெரியவில்லை என்பது நமக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் இங்கு சில அரசியல் கட்சிகள் தமிழை வளர்ப்போம், தமிழ் தான் உயிர் மூச்சு என்று வசனம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழ் பயின்று கொண்டு இருக்கும் மாணவர்களுக்கே தமிழை எழுத படிக்க தெரியவில்லை என்பது தமிழ்நாட்டிற்கு அவமானமாக உள்ளது.



 இங்கு மொழிப்போர் என்ற பெயரில் மற்ற மொழிகளை படிக்க விடாமல் தடுப்பது ஒரு வகை அரசியல் என்றால் தமிழை வளர்க்கிறோம் என்று போர்வையில் அரசியல் செய்து கொண்டு அதே சமயத்தில் தமிழை அளிக்கும் நோக்கில் பாடத்திட்டத்தைக் கொண்டு செல்வதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது.

 குறிப்பாக மெட்ரிக் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் படிக்கும் மாணவர்கள் பலருக்கு தமிழை சரியாக உச்சரிக்கவோ இது படிக்கவோ எழுதவோ தெரிவதில்லை. அதே நிலை தான் அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உள்ளது என்பது நமக்கு மேலும் பேர் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் இங்கு மாணவர்களுக்கு மொழி என்பது எவ்வளவு அவசியம் நமது தாய்மொழி என்பது எவ்வளவு முக்கியம் அதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி யாரும் பேசுவதும் இல்லை தெளிவுபடுத்துவதும் இல்லை.

 ஒரு நபர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அது நமது அறிவு வளர்ச்சி சம்பந்தப்பட்டது. ஆனாலும் தாய் மொழிக்கு என்று உள்ள முக்கியத்துவத்தை நாம் எப்போதும் அளி.க்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறை என தங்களுக்குள் சாதாரண முறையில் பேசும் பொழுது பல வார்த்தைகள் ஆங்கிலத்திலேயே உச்சரிக்கின்றனர். அதனை மாற்ற எந்த அரசியல் கட்சியோ அல்லது பெற்றோர்களும் முயற்சி செய்யவில்லை என்பது வருந்தத்தக்கது.

 ஒரே மொழியை படிக்காதீர்கள் ஒதுக்கி வையுங்கள் என்று கூறுவது புத்திசாலித்தனம் கிடையாது. எல்லா மொழிகளையும் படியுங்கள் எல்லா இலக்கியங்களையும் படியுங்கள் அதில் உயர்ந்தது நமது மொழி இலக்கியங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் புத்திசாலித்தனம்.

 மேலும் நமது மொழி எவ்வளவு பழமையானது எவ்வளவு தொன்மையானது அதன் இலக்கியங்கள் எவ்வளவு ஆழமான கருத்துக்களைக் கொண்டது என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லும் விதத்தில் இனி வரும் காலத்தில் ஆவது நம்ம தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பது அனைவரிம் விருப்பமாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?