இட ஒதுக்கீடு சமூகத்தை சம நிலைக்கு கொண்டு வந்து விட்டதா?


நமது இந்திய திருநாட்டில் அரசியலமைப்புச் சட்டம் ஆரம்ப காலத்தில் இருந்தே இட ஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளது. இது நமது இந்திய நாட்டின் சமூக அமைப்புகளை சமநிலைக்கு கொண்டு வரும் நோக்கோடு உருவாக்கப்பட்டது.

 தற்போது சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகாலம் ஆன பின்னரும் ஆரம்ப காலத்தில் இருந்த அதே இட ஒதுக்கீடு முறை இன்றும் தொடர்ந்து பிரிந்து வருகிறது.

 எப்போதுமே ஒரு சட்டம் காலம் மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே அது மக்களுக்கு பயனளிக்கும் என்பது நிதர்சனம்.

 சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு முறையில் தற்போது பலன் பெற்று வரும் மக்களை யார் என்று கணக்கெடுத்தால் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளாக முதன்முறை பலன் பெற்றவர்களே அவர்களது வாரிசுகளுக்கு அப்பலன்களை கொண்டு சேர்ப்பது தெரியவரும்.

 ஒரு விளிம்பு நிலை சமூகம் சமநிலை பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் மூலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் பலன் பெற்று வருகிறார்கள் என்பது நமது குற்றச்சாட்டு.

 அதே விளிம்பு நிலை பகுதியில் உள்ள மக்கள் இன்னமும் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் இன்றி அவர்கள் செய்த பழைய தொழில்களையே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களை முன்னேற்றுவதாகச் சொல்லி அவர்களை வாக்கு வங்கியாகவும் கேடயமாகவும் பயன்படுத்தும் ஒரு கூட்டம் அவர்களை வைத்து அரசியல் செய்வதை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை.

 குறிப்பாக ஒரு நபர் முதன்முறையாக இட ஒதுக்கீட்டின் மூலமாக கல்லூரியிலோ அல்லது வேலை வாய்ப்பிலோ வாய்ப்பு பெற்று தன் குடும்பத்தை உயர்த்தும் சூழ்நிலைக்கு வருகிறார் என்றால் அவர் தனது அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்த இட ஒதுக்கீட்டின் சலுகைகளை பெற்றுக் கொடுக்க காட்டும் ஆர்வத்தினை காட்டுகிறாரே தவிர தனது சமூகத்தில் உள்ள திறமையான மற்றொருவருக்கு அந்த வாய்ப்பினை வழங்க முன் வருவதில்லை.

 நாம் பழைய வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவர் ஆனவர்களோ அரசு வேலைவாய்ப்பு பெற்றவர்களோ தன் சமூகத்தை உயர்த்தும் நோக்கில் எந்தவித வேலையும் செய்யாமல் தன் குடும்பத்தில் அடுத்த தலைமுறை உயர்த்தும் நோக்கத்திலேயே செயல்படுவார்கள்.

 இதனால் இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் அந்தக் குறிப்பிட்ட சமூகம் முன்னேற வாய்ப்புகள் மிகவும் குறைவு.

 இதற்கு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து ஒருமுறை ஒரு குடும்பத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டால் அவர்களுக்கு மீண்டும் அந்த இட ஒதுக்கீடு வாய்ப்பு மூன்றாம் தலைமுறைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். என்பது போல் ஏதாவது ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தால் அனைவருக்கும் வாய்ப்பு சமமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 அதுமட்டுமல்லாது சமூகத்தில் உயர் பிரிவினர் என்று அழைக்கப்படும் பல பிரிவுகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலர் உள்ளன. அவர்கள் உயர் பிரிவு பிறந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை இந்த சமூகம் ஒதுக்கி வைப்பது சரிதானா? என்று கேள்வியும் வருகிறது.

 உடனே சிலர் இவர்களது சாதியினர்தான் எங்களை அடக்கி வைத்திருந்தனர் ஒடுக்கி வைத்திருந்தனர் என்று பேசிக்கொண்டு கம்பு சுத்தி வருவார்கள். அது உண்மைதான் என்ற போதிலும் முன்னோர்கள் செய்த தவறுக்கு இவர்களை தண்டிப்பது சரியா? என்ற கேள்வியும் வருகிறது.

 எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தின் ஒருவர் கொலையாளி என்பதால் அந்தக் குடும்பத்தையும் அதன் கொலையாளிகளாகவே பார்ப்பது சரியா? தொடர்ந்து அவர்களுக்கு தண்டனை வழங்குவது சரியா? இதுபோன்ற கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் இங்கு தலித் அரசியல் என்பது வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இதை அவர்கள் புரிந்து கொண்டு எல்லா சமூகமும் சமமாகவும் சந்தோஷமாகவும் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?