பங்குச்சந்தை பற்றி சிறப்பான தகவல்களைத் தரும் youtube சேனல்கள்

 


இந்திய பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை தினமும் அளிக்கும் பல youtube சேனல்கள் தமிழில் பிரபலமாக உள்ளன.

 தினசரி பங்குச்சந்தையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தரும் தகவல்கள் ஆண்டு அறிக்கைகள் மேலும் பங்குச் சந்தையில் இருந்து கொடுக்கப்படும் சுற்றறிக்கைகள் என எல்லாவற்றையும் தெரிவிக்கும் பல youtube சேனல்கள் தமிழில் உள்ளன.

 அவற்றில் பிரபலமான சில சேனல்கள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்களாக உள்ளன.



 குறிப்பாக மணி பேச்சு, ஐபிஎஸ் பைனான்ஸ், ரீயங் டைல் ஆப்ஷன்ஸ், யங் இன்வெஸ்டர், திருப்பூர் புல்ஸ், மெய்ப்பொருள் காண்க மற்றும் சேவிங்ஸ் தமிழ் போன்ற பல youtube சேனல்கள் உள்ளன.

 இவற்றில் ஐபிஎல் பைனான்ஸில் திரு நாகப்பன் அவர்கள் அளிக்கும் தகவல்கள் எளிதாக சாமானியர்களுக்கு புரியும் வகையிலும் மேலும் சிறந்த தகவல்கள் அளிப்பதாகவும் உள்ளது என்று பெரும்பாலானவர்களின் கருத்து.

 அடுத்ததாக ரீடைல் ஆப்ஷன் சேனலில் அளிக்கப்படும் தகவல்கள் சிறப்பாகவும் சந்தேகம் ஓகே சரியான முறையில் கணிப்பது போலவும் பல நேரங்களில் உள்ளது என்று கருத்துக்கள் நிலவுகின்றன. அதில் அவர் விவாதிக்கும் பங்குகள் சிறந்ததாகவும் சரியான நேரத்திலும் அந்தப் பங்கை பற்றிய சிறந்த தகவல்களோடு தான் என்ன செய்யப் போகிறேன் என்பதை முழு விவரங்களோடு பதிவிடுகிறார். அது மட்டுமல்லாமல் பல youtube சேனல்களும் மாத சந்தா வசூலித்து வரும் நிலையில் அதுபோன்ற எந்த ஒரு எண்ணமும் தனக்கு இல்லை என்றும் youtube இல் தன்னை  பின் தொடரும் நண்பர்களுக்கு தன்னால உதவிகளை செய்வதுதான் எனது நோக்கமே தவிர மாத சந்தா வசூலித்து பணம் சேர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். பொதுவாகவே பங்குச்சந்தையில் உள்ளவர்கள் முடிந்த அளவு லாப நோக்கத்திலேயே செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



 யங் இன்வெஸ்ட்டர் சேனலில் ஆண்டறிக்கைகள் சிறப்பாக தெரிவிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல அது மணி கண்ட்ரோல் போன்ற இணையதளங்களில் வரும் செய்திகளையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

 திருப்பூர் புல்ஸ் youtube சேனலில் பங்குச்சந்தை பற்றிய செய்திகளை நகைச்சுவையிடம் தெரிவிக்கும் நண்பர் தியாகு ஏகப்பட்ட ரசிகர்களை கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் அவர் சொல்லும் சும்மா வருவாளா சுகுமாரி டிரேட் மார்க் டயலாக்.

 சேவிங்ஸ் தமிழ் youtube சேனலில் நேரலைகள் சிறப்பாக உள்ளது. நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையுடனும் சிறப்பாகவும் பதில்கள் அளிக்கப்படுகின்றன.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?