சென்னை வெள்ளத்தில் தத்தளிக்க காரணம்

 


கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தத்தளிப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் சென்னையின் மக்கள் தொகை நெருக்கம், விதி மீறிய கட்டிடங்கள், நீர் நிலைகள்  ஆக்கிரமிப்பு, நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் அவற்றை பராமரிப்பதில் குறைபாடு போன்ற பல காரணங்கள் உண்டு.

 இது கடந்த 25, 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே சீர்கேடுகள் ஆரம்பித்து தற்போது புரையோடி விட்டன.

 சென்னை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆட்சியில் நல்லது நடக்கும் அந்த ஆட்சியில் நல்லது நடக்கும் என்று நம்பி மாறி மாறி வாக்களித்து ஏமாந்து கொண்டு உள்ளனர். 



தற்போது நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஏன் பயனளிக்கவில்லை என்று ஆராய்ந்து பார்த்ததில் நமது அரசியல் அரசு ஊழியர்களாக பணியாற்றும் பலரும் ஊழல் மற்றும் லஞ்சம், சிபாரிசு போன்றவற்றை பயன்படுத்தி வேலையை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலர் தகுதியற்றவர்களாகவும் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் அரசு பணி ஆணையை பெறும் பொழுது நாம் எப்படி ஊழல் செய்து சம்பாதிக்கலாம், வேலை செய்யாமல் எப்படி பொழுதை போக்கலாம் என்பது போன்ற எண்ணத்துடனே பணிக்கு வருகின்றன.



 அது மட்டுமல்லாமல் தற்போது அரசு பணிகளில் பெரும்பாலும் தகுதி திறமைகளுக்கு மதிப்பளிக்காமல் மதம் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் மூலம் பணிகள் பெருமளவு வழங்கப்படுகின்றன. இதனால் அரசு பல கோடிகள் செலவு செய்து திட்டங்கள் தீட்டி மழைநீர் வடிகால் பணிகளை செய்ய முன் வந்தாலும் அதற்கேற்ற திறமையாளர்கள் அரசில் இல்லை அதுமட்டுமல்ல அது தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கும் வேலைகள் வழங்கப்படுவதில்லை, அதிலும் ஊழல் தொடர்கதை ஆகி உள்ளது. இதனால் அரசு செலவழிக்கும் நிதி பல நேரம் வீணாவதை தடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

 இனியாவது அரசியல்வாதிகளும் அரசு விழித்துக் கொண்டு தகுதி திறமை அடிப்படையில் நேர்மையாக செயல்படும் வகையிலும் அரசு அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே வருங்காலத்தில் அரசுக்கு இதுபோன்ற கெட்ட பெயர் வருவதை தடுக்க இயலும்.

 மழைநீர் வடிகால் பணிகளுக்கு அரசு ஒதுக்கியதாக கூறப்படும் மீதி 4000 கோடி மட்டுமல்லாமல் அதற்கு மேலும் பல ஆயிரம் கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளது. இருந்தும் அதனால் பழனி ஏதும் இல்லாமல் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதற்கு உட்கட் அமைப்பு திட்டமிடல் என்பது முழு தோல்வி அடைந்துள்ளது.

 திறமையும் சிறந்த திட்டமிடல் அறிவும் கொண்ட அரசு அதிகாரிகள் இருந்திருந்தால் இந்தத் தொகையில் பாதியிலேயே திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி இருக்க இயலும் என்பது அனுபவம் வாய்ந்த பொறியியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?