அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது ஏன்?
சமீப காலமாக தமிழ்நாட்டில் பேருந்து விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசு பேருந்துகள் பல இடங்களில் சிறு மற்றும் பெரு விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அரசு பேருந்துகள் பழுதாகி சாலைகளின் நடுவே நிற்பது தொடர்கதை ஆகி வருகிறது.
இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது
அரசு பேருந்துகளின் தரம்
கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்குவதால் போக்குவரத்து நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால் பேருந்துகளை சரியாக பராமரிக்கவும் உதிரி பாகங்கள் வாங்கவும் நிதி இல்லாமல் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பேருந்துகளை சரி செய்ய போக்குவரத்து கழகங்களின் பணிமனையில் போதிய மெக்கானிக்கல் மற்றும் உதவியாளர்கள் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. பல இடங்களில் காலாவதியான பேருந்துகளும் ஓட்டை உடைசல் பேருந்துகளையுமே இயக்கச் சொல்லி போக்குவரத்து கழக நிர்வாகங்கள் ஓட்டுநர்களை கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதுபோன்ற தரம் இல்லாத பேருந்துகளை இயக்குவதால் தான் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
ஓட்டுனர்களின் தரம்
போக்குவரத்து கழகங்களில் பல இடங்களில் திரு செந்தில் பாலாஜி அவர்கள் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலம் தொட்டு ஓட்டுநர் பணிக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி நியமனாரை வணங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு அது நீதிமன்றத்தில் வழக்கு நடந்த பொழுது அவர்கள் பணியானை வழங்குவதற்கு பணம் பெற்றதை ஒப்புக்கொண்டனர். இதனால் போதி அனுபவம் இல்லாதவர்களும் வைரமுத்தை சரியாக இயக்கத் தெரியாத தரமற்ற ஓட்டுனர்களும் போக்குவரத்து கழகங்களில் பணியில் pml குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஓட்டுநர் பற்றாக்குறை உள்ளதால் பல ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து வாகனங்களை இயக்கமும் சொல்லி அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதனால் ஓட்டுநர்கள் மன அழுத்தத்திலும் ஓய்வு இல்லாத காரணத்தினால் சோர்வாகவும் வாகனங்களை இயக்குவதாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
நிர்வாக சீர்கேடு
போக்குவரத்து கழகங்களில் உயர் நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகள் பலருக்கும் பல வகைகளிலும் அரசியல் அழுத்தம் மற்றும் ஆளுங்கட்சியின் அரசியல் கூட்டங்களுக்கு ஆட்களை கூட்டிச் செல்ல வாகனங்களை அனுப்புவதிலும் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும் கூடுதல் பணி சுமைகள் கொடுக்கப்படுவதாகவும் இதனால் மன நிம்மதி இல்லாமலும் மன அழுத்தத்துடன் வேலை செய்வதால் அவர்கள் நிர்வாகத்தில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் போதிய அளவிற்கான பணியாளர்கள் இல்லை என்றும் பணியாளர்களை நியமிப்பதற்கான போதிய பொருளாதார சூழ்நிலை போக்குவரத்து கழகங்களில் இல்லை என்பதாலும் குறைந்த பணியாளர்களை வைத்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாலும் நிர்வாக ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படாததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.
அரசியல் மற்றும் ஊழல்
போக்குவரத்து கழகங்களில் வேலை செய்யும் ஆளுங்கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கள் வேலைகளை செய்யாமல் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்ச்சியாக செயல்படுவதும் மற்றும் உதிரி பாகங்கள் வாங்குவது பேருந்து வாங்குவதில் ஏற்பட்டுள்ள போன்ற பல குற்றச்சாட்டுகள் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் தரப்பில் கூறப்படுகிறது.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆவது ஓரளவுக்கு நல்ல ஆட்சி செய்யும் திறமையான நிர்வாகிகளை கொண்ட கட்சி ஆட்சிக்கு வந்து அதிலும் மிகத் திறமையான ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி ஏற்று கொண்டால் கூட தற்போதுள்ள பிரச்சினைகளை எல்லாம் சரி செய்து போக்குவரத்து கழகத்தை சீர் செய்ய சில ஆண்டுகளாக காலம் தேவைப்படலாம்.



Comments
Post a Comment