அறிவு ஜீவி அடி முட்டாள் ஆன கதை
நமது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பல ஆண்டுகள் திரையுலகல் மின்னி வந்த திரு கமலஹாசன் அவர்கள் சினிமாவில் நடிப்பு, டைரக்ஷன், தயாரிப்பு, பாடகர் என பன்முகத்திறமை கொண்ட ஒரு சிறந்த கலைஞனாக அனைவராலும் அறியப்பட்டவர். சினிமாவில் அவருக்குத் தெரியாத துறைகளை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் பல விஷயங்களை கற்றுத் தேர்ந்தவர். பல மொழிகளும் அறிந்தவர். தென்னிந்திய சினிமா முதல் பாலிவுட் வரை தன் வெற்றி கொடியை நாட்டியவர். சினிமாவில் அவர் ஒரு அறிவிஜீவி என்பதற்கு மாற்று கருத்து இல்லை.
அதனால் தானோ என்னவோ அரசியலிலும் நாம் அதே போன்று எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணி ஓவர் கான்ஃபிடன்ஸ் உடன் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தொடங்கிய புதிதில் வீராவேசமாக பல கருத்துக்களை தெரிவித்தார். குறிப்பாக அவரது தேர்தல் பிரச்சார விளம்பரத்திலேயே குடும்ப அரசியல், ஊழல், நிர்வாகத் திறமையின்மை போன்ற பல விஷயங்களுக்கு எதிராக கோபப்பட்டு தன் சின்னமான டார்ச் லைட்டை டிவியின் மேல் போட்டு உடைத்தார்.
ஆனால் அவரது அரசியல் எதிர்ப்புகள் எல்லாம் ஒரே தேர்தலில் காணாமல் போனது. இந்த அரசியல் சூழ்ச்சி வளையத்துக்குள் அவரால் சமாளிக்க முடியவில்லை. தன்னை அறிவு ஜீவி என்று நினைத்துக் கொண்டு வந்தவரை அடி முட்டாளாக்கி திமுக தற்போது தன் காலடியிலேயே வைத்துள்ளது.
திரு கமலஹாசன் அவர்கள் தன் அறிவு ஜீவித்தனத்தை எல்லாம் அரசியலில் காட்டி அரசியலிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று அவர் பின்னால் வந்த அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று எண்ணி வாக்களித்த பொது மக்களுக்கும் ஏமாற்றமே. தற்போது அவர் கட்சிக் கூட்டத்தை கூட்டினால் தனியாக அவர் மட்டுமே நிற்க வேண்டிய சூழ்நிலையே உள்ளது.
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று கர்வத்தோடு அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் அடி முட்டாளாகி அடி வாங்க வேண்டியது இருக்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு திரு கமலஹாசன் அவர்கள்.
இந்த வரிசையில் அடுத்தது விஜயும் சேர கூடும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

.png)




Comments
Post a Comment