பூமர் அங்கிள்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

 


தற்போதுள்ள இளைய தலைமுறை தங்களுக்கு முந்தைய தலைமுறைகள் ஏதாவது அவர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்களை பூமர் அங்கிள் என்று அழைக்கின்றனர்.

 இவ்வாறு இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் பூமர் அங்கிள்களின்  உலகம் எப்படி இருக்கும்?

 சென்ற தலைமுறை பூ மரங்கள் பெரும்பாலும் தங்கள் இள வயது பருவத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பார்கள். இதனால் அவர்களுக்கு சிறுவயது பருவத்திலும் சரி அவர்கள் வாலிப வயதானத்திலும் சரி அவர்கள் ஆசைப்பட்ட பல பொருட்கள் அவர்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதுமட்டுமல்லாமல் அன்றைய தலைமுறை பெரியவர்கள் இவர்களுக்கு குடும்பத்தின் நிலைமை மற்றும் பொருளாதார நிலமை ஆகியவற்றை எடுத்துச் சொல்லி உணர்த்தி பொறுப்புடன் வளர்த்தனர்.

 இதனால் அவர்கள் வளர்ந்து பொருளாதார ரீதியாகவும் ஒரு நல்ல நிலையை அடைந்த பின்பும் அவர்களுக்கு சிறுவயதில் அவர்கள் பட்ட  கஷ்டங்களும் தாங்கள் கடந்து வந்த பாதைகளையும் மனதில் கொண்டு அதிகம் செலவு செய்யாதவர்களாகவும் குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

 ஆனால் இன்றைய தலைமுறை என்பது பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் கஷ்டங்களை பொருளாதார நிலைகளை குழந்தைகளுக்கு சரியாக எடுத்துச் சொல்லி வளர்ப்பதில்லை என்ற கருத்து பரவலாக நீலவுகிறது. அதுமட்டுமல்லாது தங்கள் குழந்தைகள் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்த விட வேண்டும் என்பதும் குழந்தைகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதிலும் குழந்தைகளை யாரும் ஒன்றும் சொல்லிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ள பெற்றோர்களாக இருக்கின்றனர்.

 இதனால் அந்த குழந்தைகள் வாழ்வில் தோல்விகளையே பார்க்காதவர்களாகவும், தோல்களை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மனப்பக்குவம் இல்லாதவர்களாகவும் உள்ளனர். அது மட்டுமல்லாது அவர்களுக்கு மற்றவரின் கஷ்டங்கள் என்ன என்பது தெரிவதில்லை.

 சில சமயங்களில் மற்றவர்கள் மனதில் என்ன இருக்கிறது அவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மணப்பக்குமற்ற தலைமுறையாக இன்றைய தலைமுறை உருவாகி வருகிறது என்பது பலரின் கருத்தாக உள்ளது.

 எடுத்துக்காட்டாக ஒரு கூலி தொழிலாளியின் மகன் தன் நண்பர்கள் வைத்திருக்கும் வாகனத்தைப் போன்று தனக்கும் இருசக்கர வாகனம் வேண்டும் என்று தனது குடும்பத்தில் அடம் பிடித்து பெற்றோரின் நிலை என்பது கூட அறியாமல் தன் தாயின் தாலியை அடமானம் வைத்து வாகனத்தை வாங்கி தன் நண்பர்களுடன் சேர்ந்து அதிவேகமாக ஓட்டி விபத்துக்குள்ளாக இருக்கிறார்.

 இதற்கு அறிவுரை சொன்ன தன் தந்தையின் நண்பரை அந்த இளைஞர் பூமர் அங்கிள் உங்கள் வேலையை பாருங்கள் என்று பேசி இருக்கிறார்.

 குழந்தைகளை இதுபோன்று கஷ்டம் தெரியாமல் பொறுப்பின்றி வளர்ப்பது பின்னாளில் பெற்றோருக்கும் அந்த இளைஞரின் குடும்பத்திற்கு மேல் நல்லதல்ல என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?