உதயநிதிக்கு ஆப்பு அடிப்பது திமுகவினரே தானா?
தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க கட்சிகளில் ஒன்று திமுக ஆகும். திராவிட சிந்தாந்தத்தை முன்வைத்து அண்ணா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும்.
அண்ணாவின் மறைவிற்கு பின் அவருடன் பல மூத்த தலைவர்கள் கட்சி ஆரம்பிக்க உதவியவர்கள் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி திரு கருணாநிதி அவர்கள் இந்தக் கட்சியை கைப்பற்றினார். அன்று முதல் இன்று வரை அவரது குடும்பமே திமுக கட்சி என்று ஆகிவிட்டது.
தற்போது திமுகவின் உதயநிதியை முன்னிறுத்தி கட்சியில் பல பணிகள் நடந்து வருகின்றன. அவர் துணை முதலமைச்சர் ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் முதலமைச்சராகவும் வாய்ப்பு வரப்போகிறது என்கிற செய்திகளும் வந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் திமுகவில் இருக்கும் சில மூத்த சீனியர் தலைவர்களுக்கும் அக்கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஒரு பகுதியினர் இந்த வாரிசு அரசியலில் சில வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டு அதற்கு உடன் உள்ளனர் என்பது அக்கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் மூலமாக தெரிய வந்தது.
இதனால் திமுகவில் உதயநிதியின் செயல்பாடுகள் பற்றி பின் தொடர்ந்து அவர் செய்யும் தவறுகளை சமூக வலைத்தளங்களில் பெரிதாக்கி அவருடைய உண்மை முகத்தை உலகுக்கு தெரியப்படுத்த திமுகவிலேயே சில ஸ்லீப்பர் செல்கள் செயல்பட்டு வருகின்றன என்பது போன்ற செய்திகளும் தற்போது கசிந்து வருகிறது. சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்த நிவா புகைப்படம் மற்றும் சென்னை வெள்ளத்தின் போது அவர் நடத்திய போட்டோ சூட், தேர்தலின் போது அவர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பாளரை பற்றி பேசிய காணொளி, எடப்பாடி சசிகலாவின் கால்களுக்கு நடுவில் விழுந்து முதல்வனார் என்று பேசிய அருவருக்கத்தக்க காணொளி போன்றவற்றை வைரலாக்கி அவருடைய ஒரு உண்மையான வக்கிர புத்தி எண்ணங்களை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டுவது அவர் கட்சியிலேயே இருக்கும் ஸ்லீப்பர் செல்களாக தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது போன்ற கருத்துக்களை திமுகவினரே தெரிவிக்கின்றனர்.
திமுகவில் ஆரம்ப காலம் தொட்டே ஆரோக்கியமான நல்ல கருத்துக்களைக் கொண்ட அரசியல் எண்ணமும் மக்களுக்கான நல்ல செயல் திட்டங்களும் செயல்படுத்துவதை விட மற்றவர்களை கொச்சையாகவும் அநாகரிகமாகவும் பேசி மற்றவர்களை குற்றம் சொல்லி தாங்கள் செய்யும் தவறுகளுக்கு சப்பை கட்டு கட்டவும் அடுத்தவர்களை ஒப்பீடு செய்து அவர்கள் செய்ததை விட நாங்கள் செய்தது குறைவு தான் என்று தங்கள் தரப்பு நியாயப்படுத்தவும் மட்டுமே திமுகவினருக்கு தெரியும் என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.


Comments
Post a Comment