திமுகவின் தவறான அணுகுமுறையால் முதலீடுகளை இழக்கும் தமிழகம்

 


திமுக ஆட்சிக்கு வந்த பின் வருடம் ஒருமுறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக நமது முதலமைச்சராக அவர்கள் பல நாடுகளுக்கு சென்று வருகிறார். அவர் ஒவ்வொரு முறை வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு சில ஆயிரம் கோடிகளுக்கு முதலீடு வந்துள்ளது என்று அறிக்கைகளை அளிப்பார்கள்.

 ஆனால் உண்மையில் அதில் பாதி நிறுவனங்கள் கூட புதியதாக தொழிலை தொடங்கியதாக தெரியவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இவர்கள் அளிக்கும் அறிக்கைகளில் உள்ள பாதி நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்களை நடத்தி வரும் நிறுவனங்களாக உள்ளது.

 திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது வேதாந்தா காப்பர் நிறுவனத்திற்கு எதிராக தூத்துக்குடியில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி தேவையில்லாமல் தன்னை கார்ப்பரேட் விரோதியாக காட்டிக் கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால் பின்வரும் காலங்களில் திமுகவை தங்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

 இதனால் புதிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது திமுக ஆட்சியில் புதிதாக தொடங்கும் நிறுவனங்களிடம் அதிகபட்ச கமிஷன் தொகை அல்லது பங்குகள் கேட்டு திமுகவினர் அழுத்தம் கொடுப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதனால் தமிழகத்துக்கு வரும் பல நிறுவனங்கள் நமது அண்டை மாநிலமான ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு செல்கின்றன.



 எடுத்துக்காட்டாக கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்கும் பணி ஆந்திராவில் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழரான சுந்தர்பிச்சை தலைமை அதிகாரியாக உள்ள கூகுள் நிறுவனத்தில் தமிழ்நாட்டினர் ஆல் பேசி முதலீடுகளைக் கொண்டுவர இயலவில்லை என்பது அவர்களின் திறமையின்மையை காட்டுகிறது. மேலும் தமிழகத்தில் முதலீடு செய்வதாக கூறிய ஒரு மிகப்பெரிய காலணி நிறுவனம் தற்போது ஆந்திராவிற்கு சென்று உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நமது தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் வரவேண்டும் என்றால் அது திமுக என்ற கட்சி இருக்கும் வரை நடைபெற சாதியமில்லை என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இவர்கள் பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இவர்களது சுயலாபத்திற்காக போராட்டங்களை தூண்டி விட்டு கார்ப்பரேட்டுக்கு எதிராக போராட வைத்து விடுவார்கள் என்ற பயம் கார்ப்பரேட்டுகள் மத்தியில் உள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 மொத்தத்தில் திமுக ஆட்சியில் இருந்தும் கெடுக்கிறது இல்லாவிட்டாலும் கெடுக்கிறது என்ற நிலைதான் நிலவுவது தமிழக மக்களின் துரதிஷ்டம்.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?