தமிழ்நாட்டில் 2026 இல் தொங்கு சட்டசபை அமைந்தால்
தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான்கு முறை போட்டியாக நடைபெற வாய்ப்புகள் பெருமளவில் உள்ளன.
தற்போது வரையில் அதிமுக பாஜக தனிமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமை ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும், தமிழக வெற்றி கழகம் ஓர் அணியாகவும் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அவ்வாறு நடந்து சட்டமன்றத் தேர்தலில் விஜய் குறிப்பிடத்தக்க வாக்குகளை எடுத்து சில எம்எல்ஏக்களை தமிழக வெற்றி கழகம் பெற்றிடும் நிலையில் ஒருவேளை அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் கிட்டத்தட்ட ஒரே அளவு எம்எல்ஏக்களை பெற்றிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் யாருக்கு ஆதரவளிக்கிறதோ அவர்களை ஆட்சி அமைக்க முடியும் என்கிற ஒரு சூழ்நிலை வந்தால் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து ஓர் அரசியல் ஆய்வாளரின் கருத்து இது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு எந்த ஒரு கூட்டணியும் தனிப்பெரும்பான்மை பெறாமல் தொங்கு சட்டமன்றம் அமையும் சூழ்நிலை வந்தால் தமிழகத்தின் புதுவரமான தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்கிற ஒரு சூழ்நிலை வரும் பொழுது இரு கட்சிகளுமே அவர்களிடம் ஆதரவை கோர தயங்க மாட்டார்கள்.
அப்படி ஒரு சூழ்நிலை விட்டால் தமிழக வெற்றிக்கான தலைவர் விஜய் அவர்கள் யாருக்கு ஆதரவளிப்பார் என்பது முக்கிய செய்தியாக இருக்கும்.
திரை விஜய் அவர்களுக்கு பெரும்பான்மையாக வாக்குகள் வரும் பகுதி சிறுபான்மை வாக்கு வங்கியில் இருந்து வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து தனது கட்சியை வளர்ச்சிப் பாதிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர் எடுக்கும் முடிவு திமுகவிற்கு ஆதரவளிப்பதாகவே அமையும்.
ஏனெனில் திரு விஜய் அவர்களை தற்போது பின்புறத்தில் இருந்து இயக்குவது சிறுபான்மை கிறிஸ்தவ மிஷனரிகள் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. அவர்கள் ஒருபோதும் பாஜக ஆதரவான நிலையை எடுப்பதற்கு விரும்ப மாட்டார்கள். மேலும் விஜயும் ஆரம்பம் முதலே பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைக் கொள்கையிலேயே முனைப்பு காட்டி வந்தார்
திமுக எதிர்ப்பு வாக்காளர்கள் பலர் தற்போது மாற்று சக்தியாக தமிழக வெற்றி கழகத்தை எண்ணிக்கொண்ட அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளவர்கள் இது போன்ற ஒரு நிலை வரும்போது கண்டிப்பாக அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எனவே வாக்காளர்கள் எல்லாம் சாத்தியக்கூறுகளையும் யோசித்து வாக்களிக்க வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் விஜய் அதிகபட்சமாக 20% வாக்குகள் வரை வாங்க வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. ஆனால் இந்த வாக்கு சதவீதத்தை வைத்து தற்போது அவரால் வெற்றி பெற இயலாது என்பதை நிதர்சனமான உண்மை.
ஆனால் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒரு நிலை இருக்கும். அது மட்டுமல்லாது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல கட்சிகள் கூட்டணி மாரி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுபோன்று ஏதாவது ஒரு வாய்ப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு பெரிய கூட்டணி அமைந்தால் மேலே சொன்னது போன்று ஒரு வாய்ப்பு உருவாகலாம். அல்லது வலுவான கூட்டணியாக அமையும் பட்சத்தில் வெற்றி பெறவும் வாய்ப்புகள் அதிகம்.


Comments
Post a Comment