அமெரிக்க வல்லரசு வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா?
அமெரிக்க நாட்டின் டாலர் மூலம் வர்த்தகம் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் அமெரிக்கா பல நாடுகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
தற்போது அமெரிக்கன் அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் அவர்களின் சில தவறான நடவடிக்கைகளின் காரணமாக உலக நாடுகளின் மத்தியில் அமெரிக்காவுக்கு உள்ள மதிப்பு சற்று குறைந்து வருவதாகவே பரவலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் அதீத ஆசையின் காரணமாக முதலில் வெனிசுலாவை கைப்பற்றினார். தற்போது இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் ஈரானுடன் போரில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே இவர் அறிவித்த டாரிஃப் கோளாறு படிகளால் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் மீது வெறுப்பில் இருக்கும் நிலையில் ஈரான் மீது போர் தொடுத்து நினைத்தது போல் சுலபமாக போர் முடியாமல் ஈரானின் போர் தந்திரங்களால் தற்போது வசமாக சிக்கிக் கொண்டுள்ள டிரம்ப் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தினம் ஒரு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
ஈரான் அமெரிக்காவை எதிர்கொள்ள குறைந்த விலை ட்ரோன்கள் மூலம் இலக்குகளை தாக்கம் முற்படும்போது அமெரிக்கா தனது விலை உயர்ந்த மிசையில் தொழில்நுட்பம் மூலமே அந்த ட்ரோன்களை அழிக்க வேண்டி உள்ளது.
இதன் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் ஈரான் தந்திரமாக ஈடுபட்டு வருகிறது. தனது தந்திரங்கள் தோல்வியடைந்து விட்டது உணர்ந்து வேறு பல நாடுகளை உதவிக்கு அழைத்தார்.
ஏற்கனவே tariff விவகாரம் மற்றும் இவர் மற்ற நாடுகளுடன் நடந்து கொள்ளும் மோதல் போக்கு போன்ற பல காரணங்களால் எந்த ஒரு நாடும் ட்ரம்பிற்கு உதவியாக வருவதற்கு தயாராக இல்லை.
இதன் மூலம் உலக நாடுகளுக்கு மத்தியில் நாட்டாமை செய்யும் எண்ணத்தோடு அமெரிக்காவின் டிரம்ப் செயல்பட்டது முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் இதே போன்ற நிலை நீடித்தால் அமெரிக்காவின் வீழ்ச்சி ரன் அவர்களாலே தொடங்கி வைக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தற்போது உலக நாடுகள் பலவும் டாலர் மூலமாக வர்த்தகத்தை கைவிட்டு மாற்று வர்த்தகத்தில் ஈடுபட வழிகளை ஆராய்ந்து வருவதால் டாலர் மூலமாக நடக்கும் வர்த்தகம் முடிவுக்கு வர வாய்ப்புகள் உள்ளது.
அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு மிக குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்காவில் பொருளாதாரம் சிக்கல்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவின் வீழ்ச்சி தொடங்கலாம் என்று உலக நாடுகளில் உற்று நோக்கும்அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment