அதிமுக உட் கட்சியின் பிரச்சனைகள் குழப்பங்களை தீர்த்து நீடிக்குமா?
எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு ஜெயலலிதா வழிநடத்தி தற்போது இபிஎஸ் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் தொடர்ந்து உள் கட்சி அரசியலில் குழப்பங்களை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் கூவத்தூர் குழப்பங்களை தொடர்ந்து இபிஎஸ் அவர்கள் வசம் அதிமுக சென்றது. அப்போதே திருமதி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவை கைப்பற்ற பெருமுயற்சி எடுத்தும் அது பலன் இல்லாமல் போனது. அந்த சமயத்தில் இபிஎஸ் அவர்களை யாரும் ஒரு தலைவராகவோ ஆளுமையாகவோ பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் அப்போது வந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து சட்டப்பூர்வமாக கட்சியை தன் வசப்படுத்திக் கொண்டார்.
அதன் பின் இபிஎஸ் அவர்களும் ஓபிஎஸ் அவர்களும் இணைந்து கட்சியை ஒருமித்து நடத்தி வந்த நிலையில் அவர்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸ் அவர்களும் கட்சியை விட்டு வெளியேறினார். அதிலும் எந்த பிரச்சனைகளும் வராமல் தனக்கு சாதகமாக இபிஎஸ் அவர்கள் சாதுரியமாக நடந்து கொண்டார்.
தேர்தல் நெருங்கி வரும் இந்த வேளையில் அதிமுகவில் மேலும் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு பக்கம் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருந்த வேளையில் அவரைக் கட்சியை விட்டு நீக்கி அவரால் சில தொல்லைகளும் அழுத்தங்களும் வந்து கொண்டிருக்கும் இதே வேளையில் பி எச் மனோஜ் பாண்டியன் அவர்களும் அதிமுகவை விட்டு விலகி தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
இதுபோன்ற செயல்களினால் அதிமுக தொடர்ந்து பலவீனம் அடைந்து கொண்டு போவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த பிரச்சனைகள் எல்லாம் இபிஎஸ் அவர்கள் எப்படி சமாளித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவாரா? ஆட்சியை தன் வசப்படுத்த வாய்ப்பு உள்ளதா? அவருக்கு என்பது என்பது போன்ற கேள்விகளுக்கு அரசியல் நோக்கர்களிடம் பதில் தேடிய பொழுது அவர்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் இது போன்ற குழப்பங்கள் நீடித்தால் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டணிகளும் சரியாக அமைய வாய்ப்புகள் இருக்காது. அதுமட்டுமல்லாது கட்சித் தொண்டர்களும் அதிருப்தி அடைய வாய்ப்பு உள்ளது.
இதே நிலை நீடித்தால் திமுகவில் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து பலமாக இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது சந்தேகம்தான். இது போன்ற குழப்பங்கள் திமுகவிற்கு சாதகமாகவே அமையும் என்பது அரசியல் நோக்கங்களின் கருத்தாக உள்ளது.
இதே போன்ற நிலை நீடித்தால் அதிமுக என்ற ஒரு கட்சி பலவீனமடைந்து நாளடைவில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே இப் பிரச்சினைகளை உடனடியாக நடவடிக்கை எடுத்து அவற்றுக்கான தீர்வுகளை கண்டு கட்சி பலப்படுத்தி மேலும் கூட்டணியும் பலப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்பதே சாதாரண அதிமுக தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது.


Comments
Post a Comment