இண்டிகோ விமான நிறுவனம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறதா?
இந்திய விமான போக்குவரத்தில் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பைக் கொண்டுள்ள நிறுவனம் இண்டிகோ ஆகும். இந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாகவே இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அரசின் புதிய விதிமுறைகளால் விமானி களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளும் காரணம் என்று இண்டிகோ நிறுவனம் கூறுகிறது.
இந்திய அரசு விமான போக்குவரத்து துறையில் விமானிகள் ஆக செயல்படுபவர்களுக்கு போதிய ஓய்வு இல்லை மற்றும் வார விடுப்புகளும் சரிவர வாயில வழங்கப்படுவதில்லை என்பதை காரணம் காட்டி இனிவரும் காலங்களில் விமானிகளுக்கு வாரத்தில் இரண்டு நாள் விடுப்பும் எட்டு மணி நேரத்திற்கு மேல் விமானங்களை கேட்கும் பொழுது குறிப்பிட்ட நேரத்திற்கு பின் ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை வகுத்து அவற்றை அமல்படுத்த கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வரை அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது.
இருந்தும் சந்தையில் அதிக பங்களிப்பை கொண்டுள்ள இண்டிகோ நிறுவனம் கடைசி நேரம் வரை எந்த ஒரு முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததன் விளைவு இண்டிகோ விமானம் போக்குவரத்தில் ஏற்பட்ட குளறுபடி.
இப்படி ஒரு குளறுபடியை ஏற்படுத்துவதன் மூலம் இந்திய விமான போக்குவரத்து ஸ்தம்பிக்க வைத்து மறைமுகமாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து பிப்ரவரி மாதம் வரை ப புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மீது விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Comments
Post a Comment