காங்கிரஸ் கட்சியின் தொடர் பின்னடைவுகளுக்கு காரணம் என்ன?
இந்தியாவில் சுதந்திர காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட கட்சி காங்கிரஸ் என்பது அனைவரும் அறிந்தது.
காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்கள் சக்தி வாய்ந்த நபர்கள் இருந்ததால் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்து வந்தது.
ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அதற்குக் காரணம் அக்கா செயின் தலைமையில் ஒரு ஸ்த்திரதன்மை இல்லை. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின் காங்கிரஸில் சரியான ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. அக்கட்சியை சரியான வழியில் வழி நடத்த தலைமையில் சரியான ஆள் இல்லாததோடு மட்டுமல்லாமல் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களும் கட்சியை பலப்படுத்தும் நோக்கோடு செயல்படவில்லை. மேலும் பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்ததால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் அடிமட்ட தொண்டர்களுடன் சரியான தொடர்பில் இல்லாததோடு மக்களிடமிருந்தும் அன்னியப்பட்டு விட்டனர்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது இந்தியாவின் முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தது. எப்போது வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததோ அப்போது அவர் தங்க நாற்கர சாலை திட்டத்தை செயல்படுத்தினார். அதன்பின்பே உன்கிட்ட அமைப்பு வசதிகள் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியா ஒரு புதிய பரிமாணத்தை கண்டது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலங்களில் ராணுவத்திற்கு கூட சரியான அளவிற்கு நிதிகள் ஒதுக்கப்படவில்லை. ராணுவ வீரர்களின் உயிர் பாதுகாப்பிற்கு தேவையான குண்டு தொலைக்காக உடைகள் போன்ற அடிப்படை வசதிகளோ நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான நீர் மூழ்கி கப்பல்கள் தாங்கிகள் துப்பாக்கிகள் போன்ற உபகரணங்களோ சரியான அளவில் வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன.
அதுமட்டுமல்லாது தமிழக கடற்பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் பலர் இலங்கை கடற்பகுதிக்கு சென்றதாக கூறி அடிக்கடி துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டன. இதனால் பல இந்திய மீனவர்கள் உயிரிழந்தனர்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள காஷ்மீரின் 370 சட்ட திருத்தம், ராமர் கோவில் விவகாரம், அந்நிய தேசத்தினரின் ஊடுருவல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பலவற்றிலும் காங்கிரஸ் அரசு கவனம் செலுத்தவில்லை. இதனால் மக்கள் காங்கிரஸின் மீது சிறிது சிறிதாக தங்கள் நம்பிக்கையே இழந்து தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையை கடந்து வரவேண்டுமெனில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெற அடிமட்ட தொண்டரிலிருந்து மேல்மட்ட தலைவர்கள் வரை சுய பரிசோதனை செய்து கட்சி மறு கட்டமைப்பு செய்து புதிய சீர்திருத்தத்துடன் தொலைநோக்குப் பார்வையுடன் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு ஒரு புதிய செயல் திட்டத்துடன் நல்ல ஆளுமை மிக்க தலைவர் வழிகாட்டுதலுடன் களம் இறங்கி தொடர்ந்து வேலை செய்து வந்தால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி தங்கள் இலக்கை அடைய முடியும். இதை செய்ய காங்கிரஸ் கட்சி நிர்வாகம் முயற்சி செய்யுமா?



Comments
Post a Comment