திமுக அரசு அடிப்படை பிரச்சனைகளையே தீர்க்க முடியாமல் திணறுவது ஏன்?
திமுக ஆட்சியில் தொடர்ந்து அடிப்படையாக மக்களுக்கு தேவையானவற்றை சரியாக செய்வதில்லை என்று குற்றச்சாட்டு பல மாதங்களாக எழுப்பப்பட்டு வருகிறது.
மற்ற எந்த ஆட்சிகளிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில் மட்டும் ஏன் இந்த அளவிற்கு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது என்பதை ஆராய்ந்த போது, திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தமிழ்நாட்டின் நிதி நிலைமையைப் பற்றி அறியாமல் தங்கள் வசதிக்கேற்ப வாக்குறுதிகளை அளித்ததன் விளைவு தற்போது மிகுந்த அதிருப்தியில் திமுக அரசு உள்ளது.
அது மட்டுமல்லாது திமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் வயது மூப்பின் காரணமாக தங்கள் பணிகளை சரியாக செய்ய முடிவதில்லை என்ற கருத்துக்களும் நிலவுகின்றன. மேலும் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களுக்கான நலன்களையும் வருமானத்தையும் பார்ப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.
இந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் பலரும் திமுகவின் தலைமைக்கும் அமைச்சர்களுக்கும் சாதகமாக செயல்படுவார்களா என்று மட்டுமே பார்க்கப்படுவதாகவும் அவர்கள் திறமையானவர்களா நிர்வாகத்தில் அவர்களுக்கு எந்த அளவுக்கு அனுபவம் உள்ளது. பிரச்சனைகளை எப்படி கையாளுவார்கள் என்று தகுதிகளை திமுக அரசு பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் பல அதிகாரிகளுக்கு தங்கள் துறையை எப்படி வழிநடத்த வேண்டும் என்று சரியான புரிதல் இல்லாமல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு திமுக தலைமைக்கும் அமைச்சர்களுக்கும் சாதகமாக நடந்து கொண்டு மக்களைப் பற்றியும் அரசு நிர்வாகத்தை பற்றியும் கவலைப்படாமல் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
மேலும் இளம் தலைமுறையாக திமுகவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா போன்ற இளம் தலைமுறை அமைச்சர்கள் யாரும் தங்கள் பொறுப்புகள் என்னவென்றே தெரியாமல் தங்கள் பதவியின் கண்ணியம் தெரியாமல் பொதுவெளிகளில் நடந்து கொள்கிறார்கள் என்று மக்கள் மத்தியில் அதிருப்தியும் உள்ளது. தங்கள் துறைகளை சரியாக கவனிப்பதில்லை இந்த இளம் தலைமுறை அமைச்சர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மேலும் திரு ஸ்டாலின் அவர்கள் தனது அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது போன்ற கருத்துக்களும் நிலவுகின்றது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நேரத்தில் எப்படியாவது மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய பெயரை நிலை நிறுத்தும் விஜய் வகையில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற தன் பெயரை வைத்து திட்டங்களை அறிவிப்பதிலேயே குறியாக உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் அறிவிக்கும் உங்களிடம் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம், ஓரணியில் தமிழ்நாடு போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்துவதால் ஏதோ ஓரளவிற்கு நடைபெற்று வந்த அரசு பணிகளும் தற்போது முடங்கியுள்ளது என்ற கருத்து அரசியல் நோக்கர்களிடம் உள்ளது.
மேலும் மழைக்காலம் வரட்சி காலம் போன்றவற்றை முன்கூட்டியே தெரிந்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்யும் அரசாகவும் இந்த அரசு இல்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது. திறமையற்ற நிர்வாகத்தின் அடையாளமாக திராவிட அரசின் எடுத்துக்காட்டாக மேல் கொள்முதலில் பிரச்சனைகள், சென்னை மழைநீர் வடிகால் பணிகள் பிரச்சனைகள், துப்புரவு தொழிலாளர்களின் பிரச்சினைகள், போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள், அரசு ஊழியர்களின் பிரச்சனைகள் என அனைத்திற்கும் தீர்வு காண கூட முயலாமல் அதைப் பற்றி கேள்வி எழுப்பவர்கள் ஏதோ அரசியல் மீது வேண்டுமென்றே குறை சொல்கிறார்கள் என்பது போன்ற கருத்துக்களை கூறிக்கொண்டு முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செல்வது திமுகவை நிச்சயம் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்று மக்கள் கூற தொடங்கி விட்டனர்.
தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது இந்த ஆட்சி என்பது போன்ற ஒரு தோற்றம் மக்களிடம் உள்வாங்கியுள்ளது.


Comments
Post a Comment