தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலம்

 


நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் ஆசையின் காரணமாக தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு புதிய கட்சியை தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவருக்கு மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ஓரளவுக்கு ஆதரவும் இருந்தது.

 இதனால் அவர் நடத்தும் கட்சிக் கூட்டங்கள் மாநாடுகள் போன்றவற்றுக்கு மக்கள் கூட்டம் திரளாக வரத் தொடங்கியது. இந்நிலையில் கரூரில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் ஓடி ஒளிந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ள நடிகர் விஜய் அவர்களும் தனது பனையூர் இல்லத்திலேயே இருந்தார். அவர்களுக்கு திடீரென்று ஒரு பிரச்சனை வரும்போது அதை எப்படி அரசியல் ரீதியாக கையாள வேண்டும். சிக்கலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற அனுபவமும் சிந்தனையும் இல்லை. மேலும் விஜய் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை மற்றவர்களை சார்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்கும் பொழுது தனது தந்தையின் நிழலிலேயே இருந்தார். அதன் பின்னர் பலரும் அவரைக் கைப்பாயாக உபயோகிக்க தொடங்கி விட்டனர். இது அவரால் உணரவும் முடியவில்லை. இதனால் அவருக்கு ஏற்பட்ட அரசியல் ரீதியான பிரச்சனையையும் பின்னடைவையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையே புரியவில்லை.

 கரூர் சம்பவம் நடந்த பல நாட்கள் ஆன பின்னரும் தமிழக வெற்றி கழகத்தால் அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் செயல்படுத்தப்படவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் உயிர்ப்பு என்பது முற்றிலும் இல்லாமல் சென்று விட்டது.

 எடுத்துக்காட்டாக நாமக்கல் எக்ஸெல் பொறியியல் கல்லூரியில் நடந்த பிரச்சனையிலும் சரி, கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார பிரச்சனையும் சரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வந்ததாக தெரியவில்லை. மேலும் நடிகர் விஜய் அவர்கள் தனது சார்பிலும் எந்த கருத்துக்களும் சொல்லுவதில்லை. ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வருவதாக தோன்றுகிறது.

 இது போன்ற அரசியலில் அன்றாட பிரச்சினைகளைப் பற்றி மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் இருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் என்ற ஒரு கட்சி இருக்கிறது என்பதும் அதன் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்பதும் சுத்தமாகப் போய்விடும்.



 அரசியல் என்பது தினமும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசி அவர்களுக்காக நாங்கள் நிற்கிறோம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவது. அதை சரியான முறையில் செய்யாமல் போனதால் தமிழக வெற்றி கழகத்தின் மீது சாதாரண பொது மக்களுக்கு பெரும் அதிருப்தி உள்ளதோடு இவர்கள் இப்போதே எப்படி இருந்தால் பொறுப்புக்கு வந்தால் நிலைமை இதைவிட மோசமாகும் என்பதை உணர்ந்து கொண்டது போல் கருத்துக்கள் வெளி வருகின்றன.

 அரசியலில் ஒருவர் முன்னேறி வர வேண்டுமென்றால் சுற்றியுள்ள மனித ரூபத்தில் உள்ள அனைத்து குள்ள நரிகளையும் சந்தித்து அதன் சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து நின்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை நடிகர் விஜய் உணர்ந்து கொள்வாரா?

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?