கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்க முடியாத அறநிலையத்துறை



 தமிழகத்தில் உள்ள பாரம்பரிய இந்து திருத்தலங்கள் அனைத்தும் தற்போது நிர்வாகித்து வருவது இந்து சமய அறநிலையத்துறை ஆகும்.

 தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களில் பெரிய இந்து ஆலயங்கள் திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

 அவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலம், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் பல இந்து கோயில்களில் தரிசிக்க வரும் பக்தர்களிடம் வாகனம் நிறுத்த பார்க்கிங் கட்டணம் முதல் தரிசனம் செய்ய சிறப்பு கட்டணம் தொடங்கி பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதோடு கோவில் நிர்வாகத்திற்கு உண்டியல் மூலமாகவும் மற்றும் பல காணிக்கைகளும் வருகின்றன.

 இதுபோக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடி காணிக்கை அளிக்க காது குத்த மற்றும் கட்டளைதாரர்களாக அபிஷேக ஆராதனைகள் நடத்த பல வழிகளிலும் பக்தர்களிடமிருந்து பணம் பெறப்படுகிறது. அவற்றிலும் பல முறைகேடுகள் நடப்பதாக இந்து அமைப்புகள் மற்றும் இந்து கட்சியினர் தொடர் குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றனர்.

 அதுமட்டுமல்லாமல் மேற்கூறிய பெரிய திருக்கோயில்களில் சட்ட விரோதமாக விதிகளுக்கு புறம்பாக குறுக்கு வழியில் தரிசனம் செய்ய அதிக கட்டணம் வசூலிப்பது பல இடங்களில் அறநிலைத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அது மட்டுமல்லாமல் கோயில் நிர்வாகக் குழு கோயிலுக்கு வந்த வருமானங்களையும் அதன் செலவினங்களையும் முறையாக சரியாக சமர்ப்பிப்பதில் என்ற குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன. கோவில் நிதி தவறான முறையில் பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன.

 பல கோயில்களில் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளில் நடைபெற்ற பணிகள் தரமற்ற முறையிலும் பல முறைகேடுகளுடனும் நடைபெற்றதாகவும் பழைய கட்டமைப்பு சிறப்பாக இருந்த போதிலும் அதனை மாற்றி அமைத்து பல இடங்களில் குளறுபடி நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.



 பல திருக்கோயில் நிர்வாகங்களுக்கு பெரிய அளவில் சொத்துக்கள் உள்ளது. அவற்றில் பல சொத்துக்கள் முறைகேடாக பலருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள சொத்துக்களின் விபரங்கள் சரியாக இல்லை என்றும் மேலும் சொத்துக்களின் வருமானங்களிலும் பலவித முறை கேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

 இவை அனைத்தும் தெரிந்தும் அறநிலையத்துறை இதுவரை எந்த ஒரு அறநிலையத்துறை அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் மீதோ சட்டவிரோதமாக செயல்படும் நபர்கள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் அறநிலையத்துறையும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களும் காணாமல் போக கூட வாய்ப்பு உள்ளது.

 எனவே இந்து மக்கள் சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடி இப்படி இந்து கோயில்களுக்கு எதிராக நடைபெறும் முறைகேடுகளை தட்டி கேட்டு போராடுவதோடு நமது இந்து திருக்கோயில்கள் சிறந்த நிர்வாகத்தின் கீழ் செயல்பட தகுந்த ஆட்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும்.


 கண்ணப்பன்

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?