கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்க முடியாத அறநிலையத்துறை
தமிழகத்தில் உள்ள பாரம்பரிய இந்து திருத்தலங்கள் அனைத்தும் தற்போது நிர்வாகித்து வருவது இந்து சமய அறநிலையத்துறை ஆகும். தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களில் பெரிய இந்து ஆலயங்கள் திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலம், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் பல இந்து கோயில்களில் தரிசிக்க வரும் பக்தர்களிடம் வாகனம் நிறுத்த பார்க்கிங் கட்டணம் முதல் தரிசனம் செய்ய சிறப்பு கட்டணம் தொடங்கி பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதோடு கோவில் நிர்வாகத்திற்கு உண்டியல் மூலமாகவும் மற்றும் பல காணிக்கைகளும் வருகின்றன. இதுபோக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடி காணிக்கை அளிக்க காது குத்த மற்றும் கட்டளைதாரர்களாக அபிஷேக ஆராதனைகள் நடத்த பல வழிகளிலும் பக்தர்களிடமிருந்து பணம் பெறப்படுகிறது. அவற்றிலும் பல...