தமிழ்நாட்டின் மக்களை திசை திருப்ப பயன்படுத்தப் படுகிறதா? மாமன்னன் . தற்போது தமிழ்நாட்டில் நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தியும், வெறுப்பும் அதிகரித்துள்ளதாக பெரும்பாலானவர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் காலம் காலமாக தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் தான் சாதி சண்டை. அது போன்றதொரு சாதி சண்டையை உருவாக்க திட்டமிட்டு மாமன்னன் படத்தில் வரும் ரத்னவேல் கேரக்டரை மாஸ் வீடியோவாக உலா விடுவது என்று முடிவெடுத்து அதன் மூலமாக சாதி சண்டைகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் அதனால் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவ பெயர்களை மக்கள் மறக்க ஏதுவாக இருக்கும் என்று திட்டமிட்டு இருக்கலாம் என்று சில அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். #மாமன்னன் #ரத்தினவேல் #அரசியல் #தமிழ்நாடு