தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் போராடுவது போல் நடித்து அரசியல் செய்துவரும் நிலையில் தற்போது தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற ஒரு நெஞ்சை உருக்கும் துயர சம்பவம் மருத்துவத் துறைக்கு நீட் தேர்வு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. சென்னையில் தடகள வீராங்கனை பிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலில் ஜவ்வு பகுதியில் பிரச்சினை இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு காலில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட பின் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை அது மட்டும் அல்லாமல் மேலும் சில பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது காலில் சில பகுதிகள் அழுகிவிட்டதாகவும் இதனால் காலை உடலில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் மர...