நீட் தேர்வின் அவசியத்தை உணர்த்தும் தடகள வீராங்கனை பிரியாவின் மரணம்
தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் போராடுவது போல் நடித்து அரசியல் செய்துவரும் நிலையில் தற்போது தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற ஒரு நெஞ்சை உருக்கும் துயர சம்பவம் மருத்துவத் துறைக்கு நீட் தேர்வு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
சென்னையில் தடகள வீராங்கனை பிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலில் ஜவ்வு பகுதியில் பிரச்சினை இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு காலில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட பின் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை அது மட்டும் அல்லாமல் மேலும் சில பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது காலில் சில பகுதிகள் அழுகிவிட்டதாகவும் இதனால் காலை உடலில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தில் தெரிவிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இதன் பின்னரும் பிரியாவின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் அவரது உடலின் ஒவ்வொரு பகுதியாக செயலிழந்து வந்துள்ளது இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இன்று காலை 15/11/2022 உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று பல நிகழ்வுகள் இதற்கு முன்பும் நடந்திருந்தாலும் அவை எதுவும் இந்த அளவு கவனம் பெறவில்லை அது மட்டும் அல்லாமல் பல நிகழ்வுகளுக்கு சரியான ஆதாரங்களும் இல்லை. மருத்துவத் துறையில் இது போன்ற மருத்துவர்கள் அலட்சியத்தாலும் சரியான திறமையான மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காததால் பலர் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளான அனுபவங்கள் உண்டு.
இதற்கு முக்கிய காரணம் மருத்துவக் கல்வித் துறையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சில இடங்களிலும் முறைகேடாகவும் பெரும் தொகைகளை லஞ்சமாக கொடுத்தும் சில தகுதி இல்லாத நபர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கி விடுகின்றனர். அவ்வாறு வாங்குபவர்களின் பலர் எப்படி மருத்துவக் கல்லூரி இடத்தை விலை கொடுத்து வாங்கினார்களோ அதே போல் படிக்காமலே பட்டத்தையும் விலை கொடுத்து வாங்கவே முயன்று வந்ததற்கான சாத்தியக்கூறுகளும் இருந்தன. இதனால் தகுதியற்ற பலரும் மருத்துவ துறையில் நுழைந்து மக்களின் உயிருடன் விளையாடி வந்தனர். இதனை தடுக்கவே நீட் தேர்வு என்ற தகுதித் தேர்வு முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதனை தங்கள் அரசியல் லாபத்திற்காக தங்கள் வருமானம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காகவும் அரசியல்வாதிகளும் தனியார் பல்கலைக்கழக நிர்வாகிகளும் மற்றும் கோடிகளில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும் எதிர்த்து வந்துள்ளனர் இந்த எதிர்ப்பை ஏதோ மக்களுக்கு நன்மையை செய்வதுபோல் பாவா செய்து மக்களையும் நம்ப வைத்து நீட்டுக்கு எதிராக போராட வைத்துள்ளனர்.
இனியாவது மக்கள் தகுதியான மருத்துவர்கள் வேண்டும் என்பதை புரிந்து கொண்டு நீட்டுக்கு எதிராக பேசுபவர்களை புறக்கணித்து அவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments
Post a Comment