Free Fire mobile game க்கு அடிமையாகி பள்ளி செல்வதை தவிர்த்த மாணவன். மனநிலையை மாற்றி மாணவன் பள்ளி செல்வதை உறுதி செய்த டாக்டர்.R. ஸ்டாலின் Dr.R.Stalin IPS அவர்களின் நிமிர் (The Rising Team) * கன்னியாகுமரி மாவட்டம் - அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஒன்பதாவது வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் நான்கு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளான். * இந்த தகவலை அறிந்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நிமிர் (The Rising Team) குழுவின் * தலைமை பெண் காவலர்கள் சுமிதா, விஜயலட்சுமி மற்றும் மலர்விழி ஆகியோர் பள்ளிக்கு வராத மாணவரின் விலாசத்தை அறிந்து, * அவரின் வீட்டிற்கே சென்று மாணவனை தனியாக அழைத்து விசாரித்தில் "Free Fire Mobile game" க்கு அடிமையாக இருப்பதை அறிந்து கொண்டனர். * அந்த மாணவனுக்கு இளம் வயதின் கற்கும் கல்வியின் பலனை எடுத்து கூறி, அளவுக்கு மீறி விளையாடும் Mobile game னால் ஏற்படும் அபாயத்தை விளக்கி சிறந்த முறையில் கவுன்சிலிங் கொடுத்து... * அடம் பிடித்த சிறுவனுக்கு தாயுள்ளத்தோடு சீருடை அணிய வைத்து, தங்களது இருசக்கர வாகனத்திலே பள்ளிக்கு கொண்டு சேர்த்தது ...