தென்காசியில் தொடரும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள்
சென்னை போன்ற பெரு நகரங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் மக்கள் வெள்ளத்தால் அவதிப்படுவது தொடர்கதை ஆகி வரும் சூழ்நிலையில் நமது தென்காசி பகுதியில் தொடர்ந்து நீர்நிலைகள் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படுவது மட்டுமின்றி பல இடங்களில் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் சென்னை போன்று தென்காசியும் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். ஏனெனில் தென்காசி பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் அதிக மழை பொழிவும் பல நீர்வீழ்ச்சிகளும் உள்ளதால் இங்கு மழைக்காலங்களில் அளவுக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்பு உள்ளது. அந்த சமயங்களில் நீர் வழித்தடங்கள் மற்றும் குளங்கள் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் மழை வெள்ளமானது சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் புக வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை போன்ற அனைத்து துறைகளும் நீர் வழித்தடத்தையும் நீர்நிலைகளையும் யாரும் ஆக்கிரமிக்க விடாமல் முறையாக தூர்வாரி பராமரித்து நமது பகுதியில் விவசாயத்தையும் மக்களின்...