சென்னை வெள்ளத்தில் தத்தளிக்க பொதுமக்களும் காரணம் ஏன்?
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெய்த கன மழை நாள் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதற்கு நீர் வழிப்பாதைகள் அடைக்கப்பட்டதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததும் காரணமாக கூறப்பட்டது. அவற்றை முற்றிலும் உன்னை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் பல காரணங்கள் இந்த வெள்ளத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் கடை நடத்துபவர்களும் பொது மக்களும் தங்கள் குப்பைகளை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக மழை நீர் செல்லும் கால்வாய்களில் பொறுப்பில்லாமல் போட்டு விட்டு செல்கின்றனர். மேலும் சாலைகளிலும் கண்ட இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் எதை பற்றியும் சிந்திக்காமல் வீசிவிட்டுச் செல்லும் பொறுப்பற்ற நமது செயல்களினாலேயே மழைக்காலங்களில் ஓரளவுக்கு நீர் செல்லக்கூடிய நீர் வழிப் பாதைகளும் அடைபட்டு வெள்ளம் எங்கும் செல்ல முடியாமல் தேங்கி சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் வர காரணமாகிறது. இது போன்ற நேரங்களில் ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு இனியாவது சென்னை மக்கள் மட்டுமல்லாது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து குப்பைகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளிலோ அல்லது வீடு தேடி வந்து குப்பைகளை சேகரித்துச் செல்லும் தூய்மை பணியாளர்களிடமோ கொடுத்து தங்கள் சுற்றுப்புறத்தையும் நீர்வழிப் பாதைகளையும் சுத்தமாக பராமரித்தால் இனிவரும் காலங்களில் இது போன்ற வெள்ளை சேதங்களில் இருந்து ஓரளவு தப்பிக்க வாய்ப்பு உள்ளது.
மக்கள் தானாக திருந்தாவிடில் இயற்கை அதற்கான விளைவுகளை தங்களுக்கு பரிசளித்து விட்டே செல்லும்.
#சென்னை
#flood
#heavyrain
.jpeg)
Comments
Post a Comment