Posts

Showing posts from August, 2025

பங்கு சந்தை நிபுணர்கள் ஒரு ஒப்பீடு. -------------- பங்குச் சந்தை நிபுணர்கள் திரு நாகப்பன் அவர்களுக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு.

Image
 பங்கு சந்தை நிபுணர்கள் ஒரு ஒப்பீடு.  --------------              பங்குச் சந்தை நிபுணர்கள் திரு நாகப்பன் அவர்களுக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு. தற்போது பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது டிமேட் கணக்குகள் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் பங்குச்சந்தை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகின்றது. இதனால் பலரும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.  அவர்கள் தங்கள் முதலீடுகள் செய்ய பங்குகளை தேர்ந்தெடுக்க சமூக வலைத்தளங்களான யூடியூப்,  இன்ஸ்டாகிராம்  போன்றவற்றில் பங்குச் சந்தைகளை பற்றி தகவல்களை வெளியிடுபவர்களை நாடுகின்றனர்.  அவ்வாறு பங்குச்சந்தை பற்றி தமிழில் தினந்தோறும் தகவல்களை வழங்குவதில் விகடன் குழுமம் நடத்தும் ஐபிஎஸ் பைனான்ஸ் என்ற சேனலில் திருநாகப்பன் அவர்களும் மணி பேச்சு என்ற சேனலில் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களும் தங்கள் கருத்துக்களை தினந்தோறும் பகிர்ந்து வருகின்றன.  இவ்வாறு அவர்கள் பகிர்ந்து வருவதில் பல நல்ல தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு சென்று ...

தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?

Image
 தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?  இன்றைய கால சூழ்நிலையில் எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சி அடைந்து வருகின்றன.  அந்த வகையில் தற்போது கணினி தொழில்நுட்பத்தில் ஏ ஐ (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் ஒரு புதிய தொழில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் கணினி துறையில் பல வேலைகள் நுட்பத்தின் மூலம் எளிதாக செய்ய முடிகிறது. பல வேலை ஆட்கள் மூலம் பல மணி நேரம் செய்ய வேண்டிய வேலைகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் எளிதாக செய்து விடுகிறது.  இதுபோல் மற்ற துறைகளிலும் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. எடுத்துக்காட்டாக தானியங்கி மோட்டார் வாகனங்கள் டிரைவர்(ஓட்டுநர்) இல்லாமலே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுமான துறைகளிலும் பூச்சு வேலை, டைல்ஸ் பதிக்கும் வேலை மற்றும் பொருட்களை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் வேலை போன்ற பல வேலைகளுக்கு புதிதாக பல மிஷின்கள் வந்துவிட்டன.  இதனால் கணினி துறையில் வேலை பார்க்கும் பலருக்கும் வேலை இழக்கும் வாய்ப்ப...