அரசியல் அனாதைகளாக தெரியும் தமிழர்கள்.
அரசியல் அனாதைகளாக தெரியும் தமிழர்கள். தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கரூரில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் 41 உயிர்பலி நடந்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் முக்கிய காரணம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழக மக்களுக்கு பல அரசியல் தலைவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. அவர்கள் எதிர்பார்த்தது போல் ஆட்சிகளும் அமையவில்லை. எனவே மக்களின் எதிர்பார்ப்பு ஏதாவது ஒரு தலைவன் வந்து நம்மை காப்பாற்றி தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதனால் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தலைவர்கள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் சினிமா துறையில் பிரபலமாக இருந்து தற்போது அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் அவர்களுக்கு எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது என்பதை உண்மை. ஆனால் நம் மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நம் அரசியல் சிந்தனையும் புரிதலும் இன்னும் பல மடங்கு மேம்பட வேண்டி உள்...