கே என் ஆர் கட்டுமான நிறுவனத்தின் பங்குகள் விலை குறைய வாய்ப்பு உள்ளதா?
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கே என் ஆர் கன்ஸ்டிரக்ஷன் என்ற கட்டுமான நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளில் பெரிய கட்டுமான வேலைகளை செய்து வருகிறது.
இந்நிறுவனம் கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை 66 என்ற நெடுஞ்சாலை பணிகளை செய்து வந்தது. அந்தக் கட்டுமானத்தில் மலப்புரம் அருகில் உள்ள கூரியாட் என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சில வாகனங்கள் விபத்தில் சிக்கன. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் வாகனங்கள் சேதமடைந்ததோடு சிலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் மற்றும் ஐஐடி பொறியாளர்கள் உதவியுடன் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்து அப்பகுதியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப கட்டுமானங்கள் செய்யப்படவில்லை என்பதும் மேலும் அதிக வலுவின் காரணமாக அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கே ஆர் கட்டுமான நிறுவனம் சரி செய்து தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதோடு மேலும் அவர்கள் அரசு சார்பாக தற்போது செய்து வரும் கட்டுமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களுக்கு புதிய டெண்டர்கள் எதுவும் அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தையில் பேனா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் பங்கு விலையில் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
.jpeg)

.jpeg)
Comments
Post a Comment