அரசியல் அனாதைகளாக தெரியும் தமிழர்கள்.
அரசியல் அனாதைகளாக தெரியும் தமிழர்கள்.
தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கரூரில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் 41 உயிர்பலி நடந்துள்ளது.
இதற்கு தமிழக மக்கள் முக்கிய காரணம்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழக மக்களுக்கு பல அரசியல் தலைவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. அவர்கள் எதிர்பார்த்தது போல் ஆட்சிகளும் அமையவில்லை.
எனவே மக்களின் எதிர்பார்ப்பு ஏதாவது ஒரு தலைவன் வந்து நம்மை காப்பாற்றி தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதனால் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தலைவர்கள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் சினிமா துறையில் பிரபலமாக இருந்து தற்போது அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் அவர்களுக்கு எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது என்பதை உண்மை.
ஆனால் நம் மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நம் அரசியல் சிந்தனையும் புரிதலும் இன்னும் பல மடங்கு மேம்பட வேண்டி உள்ளது. இங்கு சினிமாவில் வரும் வசனம் போல அவர் வந்தால் மாறிவிடும் இவர் வந்தால் மாறிவிடும் என்று நாம் மற்றவர்களை மட்டுமே நம்பும் சூழ்நிலையில் இருக்கின்றோம். எப்போது நாம் என்ன தவறு செய்திருக்கிறோம். கடந்த காலங்களில் அதை தற்போது எப்படி சரி செய்யலாம். நல்ல தலைவனை எதிர்பார்க்கும் தகுதி நமக்கு உள்ளதா? நாம் சாதாரண போக்குவரத்து விதிகளை மீறுவதில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பல வேலைகளை செய்து வருகிறோம். மக்கள் பலரும் அலட்சிய சூழ்நிலையை வாழ்கின்றார்கள். நீர்நிலைகளின் சுத்தப்படுத்துவது ஆக்கிரமிப்பு செய்வது தாங்கள் வாழும் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது சட்ட நெறிமுறைகளை கடைபிடிக்காமல் அவற்றை மீறிவிட்டு அதற்கு அடுத்தவர்கள் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளும் மனநிலை தங்கள் தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினாள் அவர்கள் சரியாக இருக்கிறார்கள் இவர்கள் சரியாக இருக்கிறார்கள் என்று மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்வது போன்ற எண்ணங்களில் மக்கள் செயல்படும் வரை தமிழகத்திற்கு அரசியல் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பில்லை. நாம் சுய ஒழுக்கத்துடனும் சட்ட நெறிமுறைகளை கடைபிடித்தும் தங்கள் ஓட்டுகளை விற்காமல் நேர்மையான நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து வாக்குகளை செலுத்தாத வரை தமிழகத்திற்கு மாற்றம் என்பது சாத்தியமில்லை. எதிர்பார்ப்புடன் அரசியல் அனாதைகளாக திரியும் நிலையை இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment