தேனி மாவட்டம், ஆண்டிபட்டி துப்புரவு பணியாளர்களுக்கான கூட்டம் 27)08/2022 அன்று நடைபெற்றது.

 வணக்கம்



27.08.2022. நேற்று தேனி மாவட்டம் ஜுவன் அறக்கட்டளையோடு  மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு இணைந்து தேனி மாவட்டம், ஆண்டிபட்டி  துப்புரவு பணியாளர்களுக்கான  கூட்டம்


ஆண்டிபட்டி சமுதாய கூட அரங்கில்  வைத்து நண்பகல் 12.15 மணியளவில் நடைபெற்றது. 86 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


ஜுவன் அறக்கட்டளை நிறுவனர் தோழர்.முருகேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் தோழர். சந்திரகலா  அவர்கள் தலைமை பொறுப்பு ஏற்று தலைமை உரை நிகழ்த்தினார். 

முன்னாள் சேர்மன் இராமசாமி  அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கவுன்சிலர் தோழர்.பராசக்தி பெருமாள் அவர்கள் முன்னிலை வகித்தார்.



துப்புரவு பணியாளர்களுக்கான சட்டமான  

மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் பற்றிய விளக்கத்தை  நெறியாளர். வழக்கறிஞர். சகாய பிலோமின்ராஜ் அவர்கள் கருத்துரை வழங்கினார். மேலும் இச்சட்டத்தின் மறுவாழ்வு திட்டத்தையும் பற்றி எடுத்துரைத்தார்.

 

இந்நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் தோழர். வ.முத்துக்குமார் தொகுத்து வழங்கினார். மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்.சசிக்குமார், வழக்கறிஞர். ஸ்டாலின் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். இறுதியாக  தோழர். உமாதேவி அவர்கள் நன்றி கூறினார்.




Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?