ஸ்டாலினின் சந்தர்ப்பவாத அரசியல்
ஸ்டாலினின் சந்தர்ப்பவாத அரசியல்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்திகளில் ஒன்று, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி சந்தேகம் மரணம்.
பொதுவாக திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது அனிதா தற்கொலை, சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பொழுது எங்கே பிணம் விழும் என்று காத்திருந்த ஸ்டாலின் அவர்கள் அங்கெல்லாம் ஓடி சென்று மலிவான அரசியல் செய்து அவர்களுக்கு பணத்தை கொடுத்து அரசையும் எதிர்க்கட்சிகளையும் பணத்தை கொடுக்கச் சொல்லி நெருக்கடி கொடுத்து கேவலமான அரசியல் செய்து வந்தார்.
ஆனால் தற்போது அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது கள்ளக்குறிச்சியில் இருந்த மாணவிக்கு எந்த ஒரு நிவாரணம் இதுவரை வழங்கப்பட்டதாக தெரியவில்லை. அவர் ஆட்சியில் இருக்கும் போது இறந்தவருக்கு அத்தனை லட்சம் கொடுங்கள் இத்தனை லட்சம் கொடுங்கள் என்ற அரசை வலியுறுத்தியவர் இப்போது ஏன் மௌனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. தன்னுடைய அஜாக்கிரதையால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தின் தந்தைக்கு அரசு வேலை கொடுக்கவெல்லாம் வலியுறுத்திய ஸ்டாலின் இப்போது ஏன் அதை செய்வதில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நியாயமும் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நியாயமும் இதுதான் திராவிடம் மாடலா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Comments
Post a Comment