உள்ளாட்சிகளில் கவுன்சிலர்களின் அட்டகாசம்


 உள்ளாட்சித் தேர்தல் நடந்த முடிந்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளாட்சி பொறுப்புகள் அனைத்தும் பஞ்சாயத்து தலைவர்கள் பொறுப்புக்கு சென்றவுடன் பல மக்கள் நலத்திட்டங்களும் சலுகைகளும் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்த அந்த நிலையில் அத்தனையும் பகல் கனவாகவே சென்று விட்டது.


தற்போது உள்ளாட்சியில் சென்ற ஆட்சியில் அழைத்துக் கொண்டிருந்த ஸ்கூட்டி மானியம், அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், தாய்மார்களுக்கு மருத்துவ பெட்டகம் போன்ற பல மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு சில திட்டங்களுக்கு வேறு வடிவங்களும் வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக அம்மா மினி கிளினிக்கு பதிலாக இல்லம் தேடி மருத்துவம் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் மக்களிடம் பெரிதாக பயன் எதுவும் அளிக்கப்படவில்லை என்று பரவலான கருத்துக்கள் நிலவுகின்றன.


இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கவுன்சிலர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களின் அராஜகங்களும் வசூல் வேட்டைகளும் அதிகரித்துள்ளதோடு மக்களை சரியாக மரியாதையோடும் அவர்கள் நடத்துவதில்லை என்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. தற்போது வலைத்தளங்களில் வைரலான பல கவுன்சிலர் குறும்படங்கள் உள்ளன. ஒரு கவுன்சிலர் அருவாளை எடுத்துக்கொண்டு மக்களை விரட்டுவதும், கோவையில் கோவில்க்கு சொந்தமான சந்தை வசூல் தொகை நாங்கள் வசூல் செய்து கொள்வோம் என்று பேசிய ஆடியோ இதுபோல் மற்றும் பல சொல்லிக் கொண்டே போகலாம்.


இதையெல்லாம் பார்த்த பொதுமக்கள் உள்ளாட்சிகள் அதிகாரிகள் கையில் இருந்த போது கூட நன்றாக செயல்பட்டது. மக்கள் பிரச்சினைகள் முடிந்த அளவில் தீர்வு காணப்பட்டன. பொதுமக்களுக்கான மதிப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. மேலும் ஊழல் லஞ்சம் கட்டுக்குள் இருந்தது ஆனால் தற்போது கவுன்சிலர்கள் அவர்கள் பதவி காலத்திற்குள் கோடிகளை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுவதாக மக்களிடம் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது அடிப்படை நோக்கம் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சனைகளை அதிகாரிகள் தெரிவித்து விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுத்து அரசு சிறப்பாக செயல்பட உதவி செய்வார்கள் என்று எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது உள்ளாட்சி தேர்தலில் கொடுக்கப்படும் பதவிகள் கொள்ளையடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது இதற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருக்கலாம் என்று மக்களில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?