ஸ்டாலின் தலைமையிலான அரசு திறமை அற்ற அரசு என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறாரா கனிமொழி?

 திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சரை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. ஸ்டாலின் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன் என்றும் ஐந்து ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அப்போதே அவர் இரண்டு லட்சம் இரண்டு கோடி என்று உளறி அந்த காணொளி மிகப் பிரபலமானது இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமதி கனிமொழி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் திமுக அரசால் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தவறிவிட்டது என்பதை நிரூபிக்க வகையில் வெளி மாநிலங்களில் வேலைக்குச் செல்ல இளைஞர்களை வலியுறுத்துவது போல ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஸ்டெர்லைட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு எதிராக நடத்திய போராட்டங்களைக் கண்டு பெரிய தொழிலதிபர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இவர்கள் ஆட்சியில் இவர்களே அனுமதி அளித்துவிட்டு ஆட்சி பரிமாணவுடன் நமது நிறுவனத்துக்கு எதிராகவே போராடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கருதி பல பெரிய தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களில் முதலீடு செய்து தங்கள் நிறுவனங்களை தொடங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகளும் அதனால் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளும் அந்த நிறுவனங்களால் கிடைக்க வேண்டிய வரி வருவாயும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் ஒரு மோசமான சூழலை நோக்கியே நகர்கிறது என பொருளாதார நிபுணர்களும் அரசியல் வல்லுநர்களும் கணித்துள்ளனர்.

இஇந்த சூழ்நிலையில் கனிமொழி தெரிவித்துள்ள இந்த கருத்து திமுக ஆட்சியின் நிலையை தெளிவாக எடுத்துரைக்கிறது என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பொதிகை டைம்ஸ் பேஸ்புக் twitter instagram telegram பக்கங்களை பாலோ செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.


#Pothigaitimes #Today #News #Trending #Tamil #DMK #Dravidamodel 



Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?