இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பானதா?
இந்தியாவில் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை நினைவாக்கும் வகையில் தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானதா? என்பதை நாம் ஆராய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
வளர்ந்த நாடுகளில் டேட்டா பாதுகாப்பு மற்றும் நமது தனிப்பட்ட டேட்டாக்களை நம் அனுமதி இன்றி மற்றவர்களுக்கு பகிர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த நாடுகளில் டேட்டா பாதுகாப்புக்கான முழுமையான சட்டங்கள் உள்ளது.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை மிகுந்த மக்கள் தொகை கொண்ட நாடு தற்போது வேகமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் வளர்ந்து கொண்டிருப்பதற்கு ஏற்ப நமது நாட்டில் டேட்டா பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாக்கவும் சரியான வழிமுறைகளும் சட்டங்களும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் நமது பணப்பரிவர்த்தனைகள் 100% பாதுகாப்பானது என்று சொல்ல இயலாது.
இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்புடன் தங்கள் பண பிரச்சனைகளை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Comments
Post a Comment