பல்கீஸ் பானு பிரச்சனையை குற்றவாளிகளை விடுதலை செய்தது சரியா?
தமிழகத்தில் தற்போது பல ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்டு வரும் பிரச்சினைகளில் ஒன்று பல்கீஸ் பானு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து கருத்துக்கள்.
பல ஊடகவியலாளர்களும் மற்றும் அரசியல் நோக்கர்களும் பல்கீஸ் பானு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டது தவறு என்று பெரும்பான்மை கருத்துக்களை கூறி வருகின்றனர்
நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்த பின்னர் அதனை மேல்முறையீடு செய்து அரசியல் தலையீடுகளுடன் விடுதலைக்கு முயற்சி செய்வதென்பது நீதித்துறையை கேள்விக்கு உள்ளாக்கும். மேலும் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை தகர்ந்து போகும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப கருத்துக்களை மாற்றி மாற்றி கூறுவது நீதிமன்றத்தை பல்கீஸ் பானு பிரச்சனை கேள்விக்குள்ளாக்குவது சரி என்றால் ஏன் அவர்கள் யாரும் ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் பிரச்சனை குறித்து அல்லது இது போன்று பல வழக்குகளில் தமிழகத்தில் பலரையும் விடுவிக்க வேண்டும் என்று இதே கருத்து கூறியவர்கள் கேட்பது சரியா? என்பது நமது கேள்வி.
இங்குள்ள அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் குஜராத்தில் நடந்தால் ஒரு நியாயம் தமிழகத்தில் நடந்தால் மற்றொரு நியாயம் பேசுவது எந்த வகையில் சரி என்பது புரியவில்லை.
#Pothigaitimes #vairal #tamil #trending #news #Balkeesbanu

Comments
Post a Comment